“சீச்சீச்சீ.. நீ ஒரு ச்சீ”.. பாமக வழக்கறிஞர் பாலுவை விமர்சித்து கோபு பாடிய பாடல்.. வைரல் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக சமூக நீதிப் பேரவைத் தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கோபு, வழக்கறிஞர் பாலுவை விமர்சித்து பாடிய பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராமதாஸ் - அன்புமணி இடையே அதிகார மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், பாமகவின் சமூக நீதி பேரவை தலைவராக இருந்த வழக்கறிஞர் பாலுவை நீக்கிவிட்டு அந்தப் பேரவையின் தலைவராக கோபு என்பவரை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்தார்.

PMK Social Justice Council Chief Gopu s Song Criticizing Advocate Balu Goes Viral

பாமக மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஒருபுறம் ராமதாஸ் மாவட்ட நீர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். மறுபுறம் நீக்கப்பட்டவர்கள் தொடர்வார்கள் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

பாமகவின் மாநில பொருளாளர் திலகபாமா நீக்கப்பட்டு சையத் மன்சூரை நியமனம் செய்து ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். 37 மாவட்ட செயலாளர்கள், 17 மாவட்ட தலைவர்கள் ராமதாஸால் நீக்கப்பட்டு இருந்தனர். பாமக மாநில துணை தலைவராக முன்னாள் திருத்தணி எம்.எல்.ஏ ரவிராஜ் நியமிக்கப்பட்டார்.

சமூக நீதி பேரவை தலைவர் பாலு நீக்கம்

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள 34 அமைப்புகளில் சமூக நீதி பேரவை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாநில தலைவராக இருந்த பாமக வழக்கறிஞர் பாலுவை நீக்கிவிட்டு வழக்கறிஞர் வி.எஸ் கோபு என்பவரை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார் ராமதாஸ்.

வி.எஸ்.கோபு

இதையடுத்து, வழக்கறிஞர் வி.எஸ் கோபு செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, வழக்கறிஞர் கோபு பாலு செய்யாமல் விட்ட அனைத்து பணிகளையும் பாமகவில் நான் செய்ய இருக்கிறேன். பாமகவில் நிறுவனர் ராமதாஸ் நியமிக்கும் பொறுப்புகள் தான் செல்லும். பாமக தலைவர் அன்புமணி ராமதாசை செயல் தலைவராக நியமித்து ராமதாஸ் அறிவித்தார். அவர் அறிவித்த பொறுப்பிலேயே அன்புமணி ராமதாஸை பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பாமக சமூக நீதி பேரவையின் மாநில தலைவராக ராமதாஸால் நியமிக்கப்பட்ட கோபு, வழக்கறிஞர் பாபுவை விமர்சித்து பாடல் பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரல் ஆகும் பாட்டு

அண்மையில் பாடல் ஒன்று நாடு முழுவதும் பயங்கர வைரல் ஆனது. ஒடிசா மொழியில் 1990களில் வெளியான படத்தில் சீதாராம் அகர்வால் என்பவர் எழுதிய பாடல் இது. இப்படத்தில் நடித்த நடிகர் பிபூதி விஷ்வால் ரியாக்‌ஷனோடு கூடிய வீடியோ பாடல் தான் சமீபத்தில் ட்ரெண்ட் அடித்தது.

இந்தப் பாடலை தமிழ் உட்பட பல மொழிகளிலும் டப் செய்து பாடி வந்தனர். இந்தப் பாட்டை சற்றே மாற்றி, வழக்கறிஞர் பாலுவை விமர்சிக்கும் வகையில் பாடியுள்ளார் பாமக சமூக நீதி பேரவையின் புதிய தலைவர் கோபு.

"பணத்துக்காக ஐயாவை மறந்து அவர் கூட போனியே.. குலசாமி ஐயாவ மறந்து அவர் கூட போனியே.. அவருக்கு வயசாயிருச்சு என்று சொல்லி அவர் கூட போனியே.. ஐயா நீச்சல் குளத்துல குளிக்கிற நேரத்துல அவர் கூட போயிட்டியே.. குளித்து முடித்து முகத்தை துடைக்கும்போது பனையூர் போய்ட்டு இருந்தியே.. சீச்சிச்சீ.. சீச்சீச்சீ.. நீ ஒரு ச்சீ" எனப் பாடியுள்ளார் கோபு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+