நவ.7இல் கொச்சியில் பாலாமணி அம்மா விருது வழங்கும் விழா - கவிஞர் வைரமுத்து பங்கேற்பு
சென்னை: மலையாளக் கவிதையின் ராஜமாதாவாகப் போற்றப்படும் பாலாமணி அம்மா விருது வழங்கும் விழா கொச்சியில் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று மூத்த எழுத்தாளர் எம்.எம்.பஷீருக்கு விருது வழங்கவுள்ளார்.
இதுகுறித்து, கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"கேரளா செல்கிறேன்
மலையாளக் கவிதையின்
ராஜமாதாவாகப் போற்றப்படும்
பாலாமணி அம்மா
விருது விழாவில் கலந்துகொள்கிறேன்.
எம்.டி.வாசுதேவன் நாயர்,
அக்கிதம், டி.பத்மநாபன்
சுகதகுமாரி, ஸ்ரீகுமரன் தம்பி
போன்ற இலக்கிய மேதைகள்
பெற்ற விருதை
இந்த ஆண்டு மூத்த எழுத்தாளர்
எம்.எம்.பஷீர் பெறுகிறார்;
நான் வழங்குகிறேன்
கேரளா என்றதும்
வளமையான மண்ணும்
செழுமையான பண்பாடும்
தென்னங்கீற்றுகளின் ஓசையும்
தேனூற்றுகளின் பாஷையும்
நெஞ்சுக்குள் சில்லிடத்
தொடங்கி விடுகின்றன
நவம்பர் 7 கொச்சியில் நடைபெறும்
விழாவில் கலந்துகொண்டு
நவம்பர் 8 திரும்பிவிடுகிறேன்
தமிழ் மலையாள
இலக்கிய பந்தம்
அறுந்துவிடாத காலச்சங்கிலிபோல்
என்றென்றும் தொடர்க" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications