எனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை!
போலீஸ் தன்னை கைது செய்தால் செய்யட்டும், தனக்கு எந்த விதமான பயமும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: போலீஸ் தன்னை கைது செய்தால் செய்யட்டும், தனக்கு எந்த விதமான பயமும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று அரவக்குறிச்சியில் மநீம தலைவர் கமல்ஹாசன் தாக்குதலுக்கு உள்ளானார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று கமல் குறிப்பிட்டார். இதனால் நேற்று அரவக்குறிச்சியில் கமல் தாக்கப்பட்டார்.
இந்த நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

கோட்சே எப்படி
அவர் தனது பேட்டியில், நான் கோட்சே குறித்து கூறியதில் எந்த தவறும் இல்லை. கோட்சேவை இந்து தீவிரவாதி என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். இதே கருத்தை நான் ஏற்கனவே சென்னை மெரினாவில் பேசி இருக்கிறேன். மோடிக்கு சரித்திரம்தான் பதில் சொல்லும்.

நீதிமன்றம் தடை
கோட்சே குறித்து பேச கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. ஆனால் மடத்தின் தலைவர்கள் கூட அதை பற்றி வரம்பு மீறி பேசுகிறார்கள். அவர்களை யாரோ தூண்டி விடுகிறார்கள். இது உருவான சர்ச்சை இல்லை: இது உருவாக்கப்பட்ட சர்ச்சை

என்ன பிரச்சனை
என்னை கைது செய்தால் எனக்கு பிரச்சனை இல்லை. என்னை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும். என்னுடைய கருத்தை சிலர் ஆதரிக்கவில்லை. என் நண்பர்கள் கூட என்னை ஆதரிக்கவில்லை. ஆனால் அதில் எனக்கு பிரச்சனை இல்லை. மக்கள் என்னை ஆதரிக்கிறார்கள்.

அதிமுக எப்படி
என்னை குறித்து அதிமுகவினரின் கருத்து அவர்களின் குணாதிசயத்தை காட்டுகிறது. எனக்கு இதற்கு எல்லாம் பயம் இல்லை. அரசியல் மிகவும் கீழ்த்தரமாக மாறிவிட்டது. சூலூரில் பிரச்சார செய்ய தடை விதித்து இருக்கிறார்கள். இது அரசியல் அழுத்தம் காரணமாக நடந்துள்ளது. சூலூரில் அந்த அளவிற்கு பதற்றம் இருந்தால் தேர்தலையே தள்ளி வைக்க வேண்டியது தானே.

இந்துக்கள் ஆர்எஸ்எஸ்
இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் கிடையாது. இந்துக்கள் யார் ஆர்எஸ்எஸ் யார் என்று மக்களுக்கு தெரியும். சிலர் இவர்கள் எல்லோரும் ஒரே நபர்கள்தான் என்று கூறுவார்கள். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கிடையாது, என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications