போலி லோன்! லிங்கில் கை வைத்தாலே பணம் காலி! புதிதாக கிளம்பும் சைபர் மோசடி! எச்சரிக்கும் சங்கர் ஜிவால்

இணையத்தில் இப்போது புது வகையிலான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் இப்போது புதிய புதிய வகைகளில் சைபர் குற்றங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பாதுகாப்பாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த நவீன காலகட்டத்தில் அனைத்துமே இணையம் வழியாகவே செயல்படுகிறது. பேங்கிங், உணவு டெலிவரி அவ்வளவு ஏன் டேட்டிங் கூட இப்போது இணையம் வழியாகவே நடந்து வருகிறது. இதனால் பல்வேறு துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன.

அதேநேரம் இதைத் தவறாகப் பயன்படுத்தும் சிலர், எதுவும் தெரியாத அப்பாவி மக்களைக் குறிவைத்து சைபர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் பல லட்ச ரூபாய் வரை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

சங்கர் ஜிவால்

சங்கர் ஜிவால்

இதுபோன்ற சைபர் குற்றங்கள் புதுசு புதுசாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாகக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் பொதுமக்களுக்கான சேவைகளும், வாய்ப்புகளும் அதிக அளவில் கிட்டும் அதே நேரத்தில் இணைய வழிக்குற்றமான சைபர் குற்றங்களும் தினந்தோறும் உருமாறிக் கொண்டே வருகின்றன. சமீபகாலத்தில் இரண்டு புதுவகை சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. யூடியூப் வீடியோக்களை லைக் செய்யும்படி கூறி, பின்னர் பகுதி நேர வேலை வாய்ப்பு அல்லது முதலீடு என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் குற்றம்.

புதுவகை மோசடி

புதுவகை மோசடி

குற்றவாளிகள் டெலிகிராம் அல்லது வாட்ஸ் அப்பில் யூடியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று தொடர்பு கொள்வர்.. அவ்வாறே சில வீடியோக்களை லைக் செய்த பின்னர் பகுதி நேர வேலை அல்லது சிறிய அளவிலான முதலீடு செய்து பெரும் லாபம் அடையலாம் என்று ஆசை காட்டுவார்.. அதை உண்மை என்று எண்ணி தொடர்ச்சியாகப் பேசும் பொது மக்களிடம் ஒரு போலி வெப்சைட்டை கொடுத்து லாகின் செய்யச் சொல்லி முதலில் சிறிய அளவில் பணத்தைக் கட்ட சொல்வார்கள்.

பணம் வரவே வராது

பணம் வரவே வராது

முதலில் லாபமாக சில ஆயிரங்களில் பணம் திரும்பக் கிடைக்கும். அதை நம்பி அதிக அளவில் பணத்தைப் பொதுமக்கள் செலுத்துவர். அதற்கேற்றார் போல் பெரிய தொகை அந்த வெப்சைட்டில் காட்டப்படும்.. ஒரு கட்டத்தில் வெப்சைட்டில் காண்பிக்கப்படும் பணத்தை எடுக்க முயலும் போது, பல்வேறு கட்டணங்களான withdrawal fee, பிராசசிங் கட்டணம், என்று கட்ட சொல்லுவர். பணம் கட்ட தவறும் பட்சத்தில் அக்கவுண்ட் க்ளோஸ் ஆகிவிடும் என்றும் பயமுறுத்துவர். திரும்பத் திரும்ப அவர்கள் கேட்கும் பணத்தைக் கட்டினாலும் கூட ஒருபோதும் பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் வந்து சேராது. சில நாட்களில் வெப்சைட்டை Down செய்துவிட்டு குற்றவாளிகள் மொத்தமாகத் தடயங்களையும் அழித்து விடுவர்.

அடுத்த மோசடி

அடுத்த மோசடி

வங்கியிலிருந்து அனுப்புவது போல் மோசடி மெசேஜ் அனுப்பி பொதுமக்களின் பெயரில் லோன் எடுத்து மோசடி செய்யும் குற்றம். குற்றவாளிகள், சில தனியார் வங்கிகளின் லோகோவினை வாட்சப் படமாக வைத்துக்கொண்டு அந்த எண்ணில் இருந்து பொதுமக்களுக்கு வங்கி அனுப்புவது போல் மெசேஜ் அனுப்புவர் அதில் வங்கிக் கணக்கோடு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கவில்லை எனில் வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும் என்று குறிப்பிட்டு லிங்க் ஒன்று தரப்பட்டிருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட வங்கியில் முகப்பு பக்கத்தைப் போன்றே காட்சியளிக்கும்.

மோசடி லோன்

மோசடி லோன்

அதில் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு பொதுமக்கள் லாகின் செய்யும்போது, அந்த தரவுகள் சைபர் கிரிமினல்களுக்கு சென்று விடும். பொதுமக்களின் வங்கி தொடர்பான தரவுகளை வைத்துக்கொண்டு, அவர்களின் சேவிங் அக்கவுண்டில் உள்ள பணத்தை திருடுவதோடு. வங்கிகளின் வெப்சைட் மற்றும் மொபைல் செயலிகளில் உள்ள இன்ஸ்டன்ட் லோன் வசதியைப் பயன்படுத்தி பொதுமக்களின் பெயரில் லோன் எடுத்த, கிரெடிட் ஆகும் பணத்தை கிரிமினல்கள் தங்கள் அக்கவுண்டிற்கு உடனடியாக மாற்றி விடுகின்றனர்.

லிங்க் க்ளிக் செய்ய வேண்டாம்

லிங்க் க்ளிக் செய்ய வேண்டாம்

இதனால் தாங்கள் எடுக்காத லோன் பணத்திற்காகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும், வங்கிகள் பாதிப்புறுவதும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் முன்பின் தெரியாத நபர்கள் சொல்வதை நம்பி எந்த வெப்சைட்டிலும் பணத்தைக் கட்ட வேண்டாம் என்றும், பான் கார்டு. ஆதார் கார்டுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்று வரும் லிங்குகளையோ கிளிக் செய்ய வேண்டாம்.. இணை வழியில் உலாவும் போது கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+