பப்ஜி மதனின் அடாவடி.. தோண்ட தோண்ட உடையும் சீக்ரெட்ஸ்.. உடந்தையாக இருந்த "தோழிகள்".. விரைவில் கைது
சென்னை: பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மதனின் நண்பர்களை கைது செய்யும் முடிவில் போலீஸ் உள்ளது. முக்கியமாக அவரின் தோழிகள் சிலரும் இதில் சிக்க வாய்ப்புள்ளது.
Recommended Video
பப்ஜி மதன் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிரைம் போலீசார் இவரை தருமபுரியில் கைது செய்தனர். யூடியூபில் மிகவும் பிரபலமான கேம்மரான மதன் மீது கடந்த சில நாட்களாக கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சேனலில் வீடியோ பார்க்கும் பெண்களை லைவிலேயே மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் பேசி சர்ச்சையானர். அதோடு பள்ளி சிறுமிகளிடமும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசி இருக்கிறார். சில பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.

மதன்
இந்த நிலையில் தற்போது மதனின் நண்பர்களை கைது செய்யும் முடிவில் போலீஸ் உள்ளது. பப்ஜி மதன் கேம் விளையாடும் போது பெண்களிடம் தவறாக மட்டும் பேசவில்லை. இவர் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறான், பெண்களின் ஆபாச வீடியோக்களை விற்று இருக்கிறார். சிறுமிகளின் வீடியோக்களை விற்பனை செய்துள்ளார்.

டெலிகிராம்
இதற்காக டெலிகிராமில் பெரிய குழுவே இயங்கி இருக்கிறது. பப்ஜி மதன் இதை எல்லாம் தனியாக செய்யவில்லை. இவரின் மனைவி கிருத்திகா ஒரு பக்கம் இவர்களுக்கு கூட்டாக இருந்துள்ளனர். இன்னொரு பக்கம் பல நண்பர்கள் இவர்களின் டீமில் இருந்துள்ளனர். பெரிய கும்பல்தான் இந்த மோசடிகள் அனைத்தையும் செய்துள்ளது.

மனைவி
பப்ஜி மதன் மனைவி கிருத்திகா ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் தோழிகள் சிலரும் கைது செய்யப்பட உள்ளனர். அதேபோல் பப்ஜி மதனின் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் வெளியே பல்வேறு பணிகளை "கவனித்துக்" கொண்ட நண்பர்களும் கைது செய்யப்பட உள்ளனர்.

தோழிகள்
பப்ஜி மதன் எல்லா இடங்களிலும் தன்னுடைய பழைய புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தினார். அவர் வெளியே கூட பெரிதாக தலைகாட்டவில்லை. வெளியே பல்வேறு பணிகளை பப்ஜி மதனின் நண்பர்கள்தான் வெளிப்படையாக செய்தனர். இதனால் அவர்களை கைது செய்யும் முடிவில் உள்ளனர்.

ஆடியோ
பாலியல் ரீதியாக ஆபாச வீடியோக்களில் மோசடி செய்தது மட்டுமின்றி க்ரிப்டோ கரன்சி மூலமும் இவர்கள் மோசடி செய்துள்ளனர். அதேபோல் ஹோட்டல் ஒன்றை நடத்தியும் மோசடி செய்துள்ளனர். இதனால் பப்ஜி மதனின் கைது கடைசியாக இருக்காது, இவர் மூலம் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications