விளக்கத்தை ஏற்க மறுப்பு.. திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நாளை (15ம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நாளை (15ம் தேதி) காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு எதிராக திமுகவுக்கு சென்னை தேனாம்பேட்டை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் காணொளி காட்சி மூலம் கூட்டத்தை நடத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளுக்கு உட்பட்டு கூட்டம் நடக்கும் என திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் விளக்கத்தை ஏற்க மறுத்த காவல்துறை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை நாளை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நோய் தொற்று ஏற்படும் சூழலால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications