பாண்டிபஜாரில்.. அது என்ன சின்னதா? பேன்சி ஸ்டோரில் அலறிய பெண்.. ஓடி வந்த போலீஸ்.. செம ட்விஸ்ட்
சென்னை: பாண்டிபஜார் பகுதியில் பெண்கள் பாத்ரூமில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த நபர் கைது. 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எதிரி மணிகண்டன் விசாரணைக்குப்பின்னர் நேற்று (16.08.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார், என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
.
வடபழனியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணுக்கு இந்த சம்பவம் நடந்து உள்ளது. பாண்டிபஜார் பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் அவரை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளனர். அங்கே ரகசியமாக அந்த பெண்ணை மர்ம நபர் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பாண்டிபஜார் பகுதியில் பெண்கள் பாத்ரூமில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த நபர் கைது. 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் அறிவிப்பு: இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், வடபழனியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் பாண்டிபஜார் பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (16.08.2023) மதியம் பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் பாத்ரூமிற்குள் சென்ற போது, அங்கு ஜன்னலில் மறைவாக கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் ஒரு செல்போன் இருந்ததை பார்த்து.
செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அருகில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் மேற்படி பெண்ணிடம் தகராறு செய்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து மேற்படி பெண் R-4 சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் BNS மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-4 சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டன், வ/33, த/பெ.உலகநாதன், தி.நகர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்தவர்.
அருகில் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூம் ஜன்னலில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி மணிகண்டன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.08.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications