Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு 10 ஆயிரம் கோடி, மதுரைக்கு 9 ஆயிரம் கோடி, கோவைக்கு 8,500 கோடி! - எடப்பாடி என்ன செய்தார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அதில் திமுகவின் மாபெரும் தேர்தல் வாக்குறுதியாகக் கருதப்படும் குடும்பத்தலைவிகளுக்காக மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

சுமார் 18 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்

சுமார் 18 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்

இந்த அறிவிப்பைத் தமிழக மகளிர்கள் அனைவரும் கட்சி சார்பற்று வரவேற்றுள்ளனர். முன்பே திமுக அரசு செயல்படுத்திய மகளிர்களுக்குக் கட்டணம் இல்லா பேருந்து வசதி திட்டம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுவிட்டது. அந்த வரிசையில் இத்திட்டம் திமுகவுக்குப் பெரிய ப்ளஸ் ஆக அமையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைப் பற்றி பிறகட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? எனக் கேட்டோம். பெரும்பாலும் இந்த பட்ஜெட்டிற்கு ஆதரவு அலையே அவர்களின் பேச்சில் வீசியது.

ஆனால், இந்த பட்ஜெட்டை எடப்பாடி பழனிசாமி படிக்காமலே விமர்சித்துவிட்டுச் சென்றுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரத்துடன் அடித்துப் பேசியுள்ளார். இனி, தலைவர்களின் கருத்துகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்ணன், "தேர்தல் காலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றை முன்பே நிறைவேற்றி உள்ளனர். இப்போது குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாயை அறிவித்துள்ளனர். அதை அண்ணாவின் பிறந்தநாளில் வழங்க உள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அதற்காக இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது சாதாரண, நடுத்தர, ஏழை எளிய குடும்ப பெண்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

எந்தவித நிதி நெருக்கடியையும் காரணம் காட்டி, இத்திட்டத்தைத் தள்ளிப் போடாமல் முதல்வர் ஸ்டாலின் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் முன்பே அரசை வலியுறுத்தி வந்தன. அவர்கள் இனி இதை வைத்து அரசியல் செய்யமுடியாது.

கிட்டத்தட்ட 30 ஆயிரம் அரசு ஆரம்பப் பள்ளிகளில் படிக்கக் கூடிய பிள்ளைகளுக்கும் காலை உணவுத்திட்டத்தை முழுமையாக விரிவுபடுத்தியுள்ளார்கள். சுமார் 18 லட்சம் குழந்தைகள் இதனால் பலனடைய உள்ளனர். இதை முழுமையாக வரவேற்கிறேன்.

இதற்காக 500 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். முன்பே இத்திட்டத்தால், பள்ளிகளில் பிள்ளைகளின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மாணவர்களின் சேர்க்கையும் கூடியுள்ளதை அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. நிதியமைச்சரும் அதற்கான விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உண்மையிலேயே இது ஒரு சிறப்பான திட்டம்.

இதைப்போலவே பத்திரப் பதிவில் 4% ஆக இருந்த கட்டணத்தை 2% ஆகக் குறைத்துள்ளனர். இதனால் மக்கள் நேரடியாகப் பயனடைவர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 1000 குலங்களைச் சீரமைக்க உள்ளதாக பட்ஜெட்டில் கூறியுள்ளார்கள்.

ஒன்றிய அரசு வழங்கி வந்த ஜிஎஸ்டி மானியத்தை 5 ஆண்டுகளுடன் நிறுத்துவதாக அறிவித்திருந்தது. அதனடிப்படையில் கடந்த 2022 ஜூன் மாதத்துடன் நிறுத்துவதாக அறிவித்துவிட்டது. அதனால் மாநில அரசின் மொத்த உற்பத்தியில் 1% வருமானம் குறைந்துள்ளது. அப்படியான காலகட்டத்தில் இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளதை நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிய அரசின் நிதியானது குறைக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், முன்பே மாநில அரசுக்கு உள்ள கடன் சுமை எனப் பல நெருக்கடிகளைத்தாண்டி இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது. மாநில அரசு பற்றாக்குறையையும் குறைத்துக் காட்டியுள்ளது. இது இந்த அரசின் நல்ல நிர்வாகத் திறனைக் காட்டுகிறது" என்கிறார்.

எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தார்

எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் "அதிமுக ஆட்சி கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் கோடி வரை கடனை வைத்து விட்டுச் சென்றுள்ளது.

ஆகவே திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் எப்படி மாதம் 1000 ரூபாயை வழங்க முடியும்? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை எல்லாம் உடைத்து இன்றைக்குத் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த, குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

தினம்தோறும் விலைவாசி ஏறிவரும் இந்தச் சூழலில், இந்த உரிமைத் தொகையைத் தமிழக அரசு வழங்க முன்வந்துள்ளது. இது குடும்பத் தலைவிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றே நான் நம்புகிறேன்" என்கிறார்.

1லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்

1லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்

பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, "பள்ளிக்கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு, மகளிர் உரிமைத்தொகை, பின்தங்கிய 50 வட்டாரங்களை மேம்படுத்துவதற்கான திட்டம், பத்திரப்பதிவு கட்டணத்தை 2% ஆகக் குறைத்துள்ளது, காலை உணவுத் திட்டம் 30 ஆயிரத்து 122 பள்ளிகளுக்கு விரிவாக்கம், கடந்த 2 ஆண்டுகளில் 1லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட முதியோர் ஓய்வூதிய தொகை உயர்வு எனப் பல திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்கள். அதேபோல் ஒகேனக்கல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பாமக சார்பாக நாங்கள் வரவேற்கிறோம்" என்கிறார்

எந்த மாநில முதல்வரும் செய்தாதது?

எந்த மாநில முதல்வரும் செய்தாதது?

இந்தியத் தேசிய காங்கிரஸ் செல்வப் பெருந்தகை, "இந்த 2020-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. கொரோனா பெருந்தொற்று, இந்திய, உலகப் பொருளாதாரம் மந்தம், மேலும் உக்ரைன் போரினால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு என இவ்வளவு நெருக்கடிகள் இருந்தபோதும் கூட மிகவும் நிதி ஆளுமையோடு இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அதைக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.

எதிர்க்கட்சிகள் எல்லாம் குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கப்படாததை வைத்து அரசியல் செய்ய முற்பட்டார்கள். ஒரு மாணவர் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்றால், முதலில் காலாண்டு எழுத வேண்டும். பின் அரையாண்டு எழுத வேண்டும். அதன்பின்னர் தான் முழு ஆண்டு எழுத முடியும். ஆனால் இன்றைக்குக் காலாண்டு தேர்விலேயே, மக்களிடம் அளிக்கப்பட்ட 90% வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் காமராஜர் பெயரில் ரூ 1000 கோடியில் உயர்கல்வி மேம்பாடுத் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். அயோத்திதாச பண்டிதர் பெயரில் 1000 கோடி ரூபாயில் வடசென்னை மேம்பாட்டுத்திட்டம், டாக்டர் அம்பேத்கர் பெயரில் காலங்காலமாக மனிதனின் கழிவை மனிதனே அள்ளும் முறையை ஒழித்து, அதற்கானக் கருவியைப் பயன்படுத்துதல், இதுவரை யார் யாரெல்லாம் இத்தொழிலில் ஈடுபட்டு இறந்துள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களின் வாரிசுகளைப் பயனாளிகளாகக் கொண்டு 35% மானியம் அளித்து 6% வட்டியுடன் நிதி அளித்து அவர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றவேண்டும் எனத் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளது.

ரூ 100 கோடி செலவில் முதற்கட்டமாக மனிதக் கழிவை அள்ளுவதற்கான கருவியைக் கண்டுபிடிக்க நிதி அளித்துள்ளார்கள். இது ஒரு மகத்தான பணி. இந்தியாவில் இப்படியான ஒரு திட்டத்தை வேறு எந்த மாநிலங்களும் செய்ததில்லை. அதற்காக முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்" என்கிறார்

எடப்பாடி என்ன செய்தார்?

எடப்பாடி என்ன செய்தார்?

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு செல்போன்கள் வழங்கப்படும் என்று அறிவித்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பெண்களுக்கும் செல்போன் கிடைக்கவே இல்லை என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 85% ஐ நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார். மீதம் உள்ள 15% வாக்குறுதிகளும் வரும் ஆண்டில் படிப்படியாக நிறைவேற்றப்பட உள்ளன.

இன்றைக்கு குடும்பத்தலைவிகளுக்காக மாதம் 1000 ரூபாய் வழங்கக் கூடிய மகத்தான ஒரு திட்டத்தை நிறைவேற்றித் தந்துள்ளார். இத்திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி எந்தத் தகுதியின் அடிப்படையில் இதை வழங்க உள்ளார்கள் என்று கேள்வி எழுப்பிவிட்டுச் சென்றுள்ளார். அதற்கான பதில் உள்ளபடியே பட்ஜெட் புத்தகத்தில் உள்ளது. அதை அவர் கொஞ்சம் பொறுமையாகப் படித்துப் பார்த்திருக்கலாம். இது இ- பட்ஜெட்தான். அவரது கணினியில் பார்த்திருந்தாலே அதற்கான விடை கிடைத்திருக்கும். ஆனால், அவர் செய்யவில்லை.

அதாவது பட்ஜெட்டில், 'இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும்' என உள்ளது. அதை அவர் படித்தாரா எனத் தெரியவில்லை. எடப்பாடி கூவத்தூரில் எப்படி முட்டிப் போட்டு முதலமைச்சர் ஆனார்? எப்படி நம்பிக்கைத் துரோகத்தால், அந்தப் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்? இவை எல்லாம் நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த மகளிருக்கான ரூ 1000 உரிமைத் தொகை வழங்கமாட்டார்கள் என அவர் நம்பி அவைக்கு வந்திருக்கலாம். ஆனால் அவரது நினைப்புக்கு எதிராகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் 7 ஆயிரம் கோடியை அந்தத் திட்டத்திற்காக வழங்கி, தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தியை அளித்துள்ளார். அதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்றைக்குக் காலை உணவுத்திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் விரிவாக்கம் செய்துள்ளார். ஏறக்குறைய 18 லட்சம் பிள்ளைகள் பயனடைய உள்ளனர். இது தேர்தல் வாக்குறுதியில் இல்லாத திட்டம். அதற்கும் நிதி அளித்துச் செயல்படுத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனை எதிர்க்கட்சியைச் சார்ந்த எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும்.

சென்னை மெட்ரோ திட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின், 10 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார். கோவையில் மெட்ரோ திட்டத்திற்கு 9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம். மதுரையில் 8500 கோடியில் பெருநகர் திட்டம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எத்தனை திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறார்? எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்? அவரது ஆட்சியில் கொரோனா வந்ததால் நிதி நெருக்கடி என்கிறார். ஒரு வருடம்தான் கொரோனா. அதற்கு முன்னால் எடப்பாடி கொண்டுவந்த திட்டங்கள் என்ன? சொல்ல முடியுமா?" என வகுந்து எடுத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+