ஏற்க முடியவில்லை.. அவர்களை விசாரித்து தண்டியுங்கள்.. பொள்ளாச்சி வழக்கில் குரல் கொடுத்த தமிழிசை
பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது உச்சம் அடைந்து இருக்கிறது. தமிழகம் முழுக்க இந்த வழக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

200க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.
ஆனால் இதில் இன்னும் பலர் வெளியே சுற்றி வருகிறார்கள். இதுகுறித்து தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,பெண்ணினம் கசக்கப்படுவதையும்..நசுக்கப்படுவதையும்..துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாதஒன்று,பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும,சரியானவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) March 11, 2019
இதுகுறித்து தமிழிசை செய்துள்ள டிவிட்டில் ''பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது, பெண்ணினம் கசக்கப்படுவதையும்..நசுக்கப்படுவதையும்..துளியும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும்'' என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications