Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்ணின் கண்ணீர் கேட்கவில்லையா.. எல்லாரையும் கைது பண்ணுங்க.. பெரிதாகும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அத்தனை நபர்களையும், குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் சிக்கிய 1500 வீடியோக்கள்

    சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அத்தனை நபர்களையும், குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

    பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

    இந்த கும்பலில் இன்னும் 16-17 பேர் வெளியில் சுதந்திரமாக சுற்றி வருவதாக போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.

    உடனே கைது

    உடனே கைது

    இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக சமூக வலைத்தளங்களில் தற்போது #ArrestpollachiRapists (பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்யுங்கள் ) என்ற டேக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த டேக் டிவிட்டரில் வேகமாக வைரலாகி வருகிறது.

    மரண தண்டனை

    இவர், பொள்ளாச்சியில் 273க்கு மேற்பட்ட சிறுமிகளை நாசம் செய்த ஐயோக்கியர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும்🙏இந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க செய்கிறது😭மரண தண்டனை வழங்க வேண்டும், என்றுள்ளார்.

    கடும் கோபம்

    நடிகர் ஜீ.வி பிரகாஷ், ''மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து.'' என்று கூறியுள்ளார்.

    ஏழை பெண்கள்

    எந்த ஏழையான பெண்களுக்கு யார் நீதி கொடுப்பது.. ஒரு சமூகம் இதை அனுமதிப்பது எப்படி சரியாக இருக்கும் என்று இவர் கேட்டு இருக்கிறார்.

    தூக்கு தண்டனை

    இவர், காமவெறி பிடித்த பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அனைத்து நாய்களையும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து தூக்குத்தண்டனை வழங்க வேண்டும், என்றுள்ளார்.

    திட்டமிட்டு

    இவர் ''அவ்ளோ பெரிய கொடூரம்.ப்ளான் பண்ணி சிஸ்டமா பெரிய கும்பலே பல பெண்களை ஏமாத்தி மிரட்டி விபச்சாரத்துக்கு பயன்படுத்திருக்காங்க. இந்த விவகாரமே பெருசாகலன்னா இதுமாதிரி இன்னும் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவாங்க. பாதிக்கப்பட்டாலும் வெளியில சொல்லமுடியாம ஆகிரும்'' என்றுள்ளார்.

    அந்த குரல்

    அந்த கண்ணீர் விடும் பெண்ணின் அழுகுரல் உங்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவில்லையா? என்று இவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    மிக மோசம்

    இவர் ''கொங்கு மண்டலத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த பொறுக்கிகளையும் இந்த கும்பலுக்கு பின்னால் இருக்கும் பாலியல் குண்டர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.'' என்றுள்ளார்.

    கண்டிப்பா நடக்கணும்

    இவர் ''சினிமாவுல தான் இந்த ராபின் ஹூட் வரது, நேர்மையான அதிகாரிகள் இருக்கிறது, இல்லேன்னா பாதிக்க பட்ட பொண்ணோட அண்ணனோ அப்பாவோ பழி வாங்கறது எல்லாம்,
    நடைமுறைலே தண்டனை கடுமை ஆக்க படனும், இல்லேன்னா இந்த ஈன பசங்க மாதிரி ஏக பட்ட பேர் வருவானுங்க'' என்று கூறியுள்ளார்.

    பதற வைக்கும் வீடியோ

    இவர் ''பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை மட்டுமே சரியான தீர்வாக அமையும்..பெண்கள் அதிகம் தெரியாதவர்களிடம் பழக வேண்டாம்..
    இந்த வழக்கு சம்பந்தமான சில காணொளி நெஞ்சை பதற வைக்கிறது.. இருப்பினும் அதை ஒரு விழிப்புணர்வுக்காக பெண்களிடம் பரப்புவதில் தவறில்லை ''என்றுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+