முழுக்க முழுக்க இலவச டிக்கெட்! தரமான சம்பவம்.. கிளாம்பாக்கம் செல்லும் மக்களுக்கு ஸ்வீட் நியூஸ்!
சென்னை; பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கிளாம்பாக்கத்திற்கு ஸ்பெஷல் மினி பேருந்துகள் விடப்பட்டு உள்ளன. சென்னையின் பல பகுதிகளில் இருந்து எளிதாக செல்லும் விதமாக மினி பேருந்துகள் விடப்பட்டு உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் வசதிக்காக, புறநகர் பேருந்து நிலையம் மற்றும் மாநகர் பேருந்து நிலையத்திற்கு இடையே இலவசமாக மினி பேருந்து சேவை இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சிஎம்டிஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது.
பொங்கலுக்கு முன் 12-01-24 முதல் 14-01-24 2 (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) செய்யப்படும்.
பொங்கல் பண்டிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு 17,589 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் பொங்கலுக்காக கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.
பொங்கலுக்கு பின் 16-01-24 முதல் 18-01-24 வரை (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
பொங்கலுக்கு பிறகு வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரைதான் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 5 முன்பதிவு மையங்கள் செயல்படும். மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பொங்கலுக்கு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கிளாம்பாக்கத்திற்கு ஸ்பெஷல் மினி பேருந்துகள் விடப்பட்டு உள்ளன. சென்னையின் பல பகுதிகளில் இருந்து எளிதாக செல்லும் விதமாக மினி பேருந்துகள் விடப்பட்டு உள்ளன.
பேருந்து ரூட்: பொங்கலை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும்என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.
எங்கே செல்லும்?: பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும்.
எப்படி இயங்கும்: கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மாநகர போக்குவரத்துக் கழகம்: மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.
அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications