Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொகுசு பங்களாவில் நடிகை சிக்கியது எப்படி.. நள்ளிரவில் என்ன நடந்தது.. வெளியான பரபர தகவல்கள்

பண்ணை வீட்டில் மதுவிருந்தில் கலந்து கொண்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே, பண்ணை வீட்டு பார்ட்டியில் துணை நடிகை சிக்கியதையடுத்து, அதன் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ எல்.ஆர்.பார்ம் சாலையில் சுகுனா கார்டன் உள்ளது..

இங்குள்ள ஒரு சொகுசு பண்ணை வீட்டில், இரவு நேரத்தில் மதுவிருந்து நடப்பதாக கானாத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது.. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சம்பந்தப்பட்டவர்களை மடக்கி பிடித்து, 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 துணை நடிகை

துணை நடிகை

இந்த பார்ட்டியை நடத்தியது யார் என்ற விசாரணையை துவக்கினர்.. அப்போதுதான் நடிகை கவிதாஸ்ரீ-யின் பெயர் சிக்கியது.. பிரபுதேவாவின் காதலன் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.. முரட்டு பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.. இவருடைய நண்பர் பெயர் நண்பர் ஸ்ரீஜித்குமார்.. இவர்கள் இதுபோன்ற பார்ட்டிகளை நடத்தி வருவது வழக்கம்.

 வாடகை

வாடகை

இந்த பண்ணை வீட்டில் வழக்கமாக சினிமா ஷூட்டிங் நடக்குமாம்.. அப்படி ஒருவர் வாடகை எடுத்துள்ளார்.. ஆனால், இவர்கள் அந்த வாடகை எடுத்தவரிடம் உள் வாடகைக்கு போயுள்ளனர்.. அதாவதுபார்ட்டி நடத்துவதற்கு ஒருநாளைக்கு 15,000 ரூபாயாம்.. அப்படித்தான் கவிதாஸ்ரீ ஒருநாள் வாடகை பணம் கட்டி உள்ளார்.

 கட்டணம்

கட்டணம்

கவிதாவும் அவரது நண்பர் ஸ்ரீஜித்குமாரும், சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு என்ட்ரி ஃப்ரீ என்று அறிவித்துள்ளனர்.. ஆனால், பார்ட்டியில் கலந்து கொள்ள 1,599 ரூபாய் கட்டணம் என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும் யாருக்கெல்லாம் டான்ஸ் ஆட விருப்பமோ, அவர்கள் தாராளமாக ஆடலாம் என்றும் பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பெண்களிடம் சொல்லி உள்ளனர்..

 கூகுள் பே

கூகுள் பே

இந்த கட்டணங்கள் அனைத்தையுமே கூகுள் பே மூலம் வசூலித்திருக்கின்றனர்... இந்த விளம்பரத்தை பார்த்ததுமே ஏராளமான இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர். எத்தனை பேர் பணம் கட்டினார்களோ, அவர்கள் அனைவரும் வந்தபிறகு அந்த பண்ணை வீட்டின் கேட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, பார்ட்டியை ஆரம்பித்துள்ளனர்..

 டான்ஸ்

டான்ஸ்

விடிய விடிய பார்ட்டி நடத்துவதுதான் பிளானாம்.. பார்ட்டி ஆரம்பித்துமே பெண்களும், ஆண்களும் சேர்ந்து டான்ஸ் ஆட ஆரம்பித்துள்ளனர்.. இந்த டான்ஸ் ஆரம்பிக்கும்போதுதான் போலீசுக்கு தகவல் சென்றுள்ளது.. போலீசாரும் பண்ணை வீட்டுக்குள் அதிரடியாக சென்றதுமே, ஆளுக்கொரு பக்கம் எகிறி தப்பி ஓட முயன்றுள்ளனர்.. 15 ஆண்களும் 11 பெண்களும் என மொத்தம் 26 பேர் இருந்துள்ளனர்..

ஜாமீன்

ஜாமீன்

எல்லாருமே போதையில் இருந்திருக்கிறார்கள்.. அரைகுறை டிரஸ்ஸில் ஆடி கொண்டிருந்தவர்கள், தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீஸார் எல்லாரையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி அதன்பிறகுதான் வார்ன் செய்து, ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+