இந்த 2K கிட்ஸ் மோசம்பா.. ஸ்கூல் லீவ் எடுக்குறது எப்படி? பிரதீப் ஜான் கொடுத்த சூப்பர் ஐடியா
சென்னை: தன்னிடம் பள்ளி விடுமுறை தொடர்பான தகவல்களை கேட்க வேண்டாம் என 2K கிட்ஸ்களிடம் தெரிவித்துள்ள பிரதீப் ஜான், பள்ளிக்கு விடுமுறை விட நகைச்சுவையான அறிவுரையையும் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான்.
அரசின் அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையங்கள் வெளியிடும் தகவல்களைவிட துள்ளியமான வானிலை தகவல்களை வெளியிட்டு வருவதால் பிரதீப் ஜான் மக்களிடையே அதிக பிரபலமடைந்தார்.

வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இன்றைய முன்னெச்சரிக்கை
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் திருச்சிராப்பள்ளியிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தென் மாவட்டங்கள்
தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

நாளையும் மழை
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மாவட்டம்
6ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டங்களிலும் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவித்து இருக்கிறது.

4 நாட்கள் தொடர் மழை
7 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பிரதீப் ஜான்
இது ஒருபுறம் இருக்க தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தொடர்ந்து வானிலை குறித்த தகவல்கள், காற்றின் திசை, மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் என அடுத்தடுத்து பல்வேறு தகவல்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பிரதீப் ஜானிடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை குறித்த விபரங்களை தெரிவிக்கின்றனர்.

பள்ளி விடுமுறையா?
இந்த நிலையில் நேற்று பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் பிரதீப் ஜான், "தயவு செய்து பள்ளி விடுமுறை தொடர்பாக மீண்டும் கேட்காதீர்கள். அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன். இந்த 2K ஸ்கூல் கிட்ஸ் ரொம்ப மோசம். மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன் காலை 6 மணிக்கு டேங்கர் லாரியின் மழைய ஸ்ப்ரே பண்ணுங்க. அவர்கள் உங்கள் விடுமுறை அறிவிப்பார்கள்." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications