ரூ.436 கட்டினால் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்.. மத்திய அரசின் அசத்தல் காப்பீடு திட்டம்.. பயனுள்ள சேமிப்பு
சென்னை: பொதுமக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) திட்டமாகும். இதன் பலன்கள் என்னென்ன ? இந்த திட்டத்தில் எப்படி இணைவது தெரியுமா?
பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மக்களுக்காக, மருத்துவ காப்பீட்டை தரக்வடிய திட்டம்தான் இந்த பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY).. அந்தவகையில், வருடத்துக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது.

பாலிசிதாரர்: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா (PMJJBY) திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், வருடத்துக்கு 436 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.. அதாவது மாத மாதம், ரூ.40க்கும் குறைவாக ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்..
அரசின் இந்த காப்பீட்டுத் திட்டமானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.436 டெபிட் செய்யப்படும்.
இன்சூரன்ஸ்: இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால், 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்... இந்த காப்பீடு திட்டமானது, ஒரு வருடத்திற்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது என்பதால், பாலிசியை வருடந்தோறும் புதுப்பித்து கொள்ள வேண்டும்..
இந்தத் திட்டத்தை எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி அஞ்சல் அலுவலகங்களில் தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணையலாம். ஒருவேளை உங்களது வங்கி கணக்கு மூடப்பட்டாலோ அல்லது ப்ரீமியம் வசூலிக்கும் சமயத்தில் போதுமான பணம் வங்கி கணக்கில் இல்லாமல் இருந்தாலோ, இந்த காப்பீடு காலாவதியாகிவிடும்.
வங்கி கணக்கு: அதேபோல, உங்களுக்கு பல வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருக்கலாம். அதற்காக நீங்கள் எல்லா வங்கிகளிலுமே, இந்த திட்டத்தினை தொடங்க முடியாது. காரணம், ஒருவருக்கு இந்த திட்டத்தின் மூலம் ஒரு பாலிசி தான் எடுக்க முடியும். எனவே, இந்த திட்டத்திற்கு தகுதியான ஒருவர், உங்களுக்கு அருகில் உள்ள ஒரு வங்கி மூலம் இணைந்து பயன் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேர, வங்கி கணக்குடன் வங்கி கணக்கோடு ஆதார் நம்பரையும் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் இணைந்த ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவரது நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்: க்ளைம் செய்வதற்கு, இறப்பு சான்றிதழ் மட்டுமல்லாமல், மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் வங்கிக் கணக்கு என பல சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களது ஆவணங்களை சரிபார்த்து பிறகு, காப்பீட்டு பணம் வங்கி கணக்கில் வந்துவிடும. இதற்கு 30 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.












Click it and Unblock the Notifications