"ராதிம்மா.. 'அது' ஒரு சாக்கடை.. வேணாம்மா".. உருகும் அன்புகள்.. பட்டையை கிளப்ப போகும் ராதிகா..!
ராதிகாவின் சமக பிரச்சாரம் மக்களிடம் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: "ராதிமா.. அரசியல் ஒரு சாக்கடை.. அதெல்லாம் உங்களுக்கு வேணாம்மா" என்று நடிகை ராதிகாவின் அரசியல் பயணம் குறித்து ரசிகர்கள் அன்புடன் கோரிக்கை வைத்து வருகின்றனர்.. மற்றொரு புறம் சமகவின் பிரச்சாரத்திற்கு ராதிகா தயாராகி வருவதால், அதற்கான எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
நடிகை ராதிகா என்றாலே தமிழகத்தில் ஒரு கிரேஸ் எல்லா காலத்திலும் இருந்து வரத்தான் செய்கிறது.. அதற்கு காரணம், ஆரம்ப காலம் முதல் இப்போது வரை ராதிகாவின் ஒவ்வொரு வளர்ச்சியையும் தமிழக மக்கள் கண்கூடாக பார்த்து வருவதுதான்.
சீரியலே பார்க்காதவர்கள் கூட ராதிகாவின் சீரியலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.. அன்றைய தினம் கலைஞர்கூட சித்தி உட்பட எல்லா சீரியலையும் பார்ப்பதாக தகவல்கள் வெளிவந்தன.. இன்றும்கூட கிராமப்புறங்களில் ராதிகாவுக்கு வயது வாரியான ரசிகர்கள் உள்ளனர்.. இதில் ஏராளமானோர் குடும்ப பெண்களே..!

படிப்படியாக விலகல்
இப்போது ராதிகா சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.. ஆனால் விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், படிப்படியாக விலகி சரத்குமாருக்கு ஆதரவாக முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தகவல் சரத்குமாருக்கு வேண்டுமானால் சந்தோஷம் தரலாமே தவிர, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை.. மாறாக அதிர்ச்சியையே ஏற்படுத்தி வருகிறது..

கோரிக்கை
"ராதிமா.. அரசியல் ஒரு சாக்கடை ராதிமா.. நீங்க அன்னைக்கு பிரச்சாரம் செய்யும்போது யாரையும் அசிங்கப்படுத்தல.. அதனால உங்களை போன்றவர் எல்லாம் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது... சரத் அப்பா மீது நீங்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பது தெரிகிறது... அதுக்காக முழு நேர அரசியல் வேண்டாம்... பிரச்சாரத்திற்கு போவதுடன் நிறுத்திக்குங்க.. உங்களை கேவலப்படுத்துவார்கள்.. அதை உங்களாலும் தாங்க முடியாது, எங்களாலும் தாங்க முடியாது" என்று உரிமையுடன் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

சரத்குமார்
உண்மையிலேயே ராதிகாவின் அரசியல், பிரச்சாரங்கள் எப்படி இருக்க போகின்றன? சமகவுக்கு கை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகின்றன.. இப்போதைக்கு சமக அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது.. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்போம், தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமக
அந்த கட்சியில் மாநில மகளிரணி செயலாளராக ராதிகா இருக்கிறார்.. ஒவ்வொரு முறை சரத்குமார் தேர்தலில் நின்றாலும் ராதிகாவின் பிரச்சாரம் பெரும் பலத்தை சமகவுக்கு தந்து வருகிறது.. முன்பு ஒருமுறை, நெல்லை எம்பி தொகுதியில் சமகவின் அரசியல் ஆலோசகரான ராதிகாவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வாய்ப்பு கேட்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை அதிமுக தரப்பில் நிராகரித்துவிட்டனர்.

பிரச்சாரம்
இப்போது ராதிகா தேர்தலில் நிறுத்தப்படுவாரா? அல்லது பிரச்சாரம் மட்டும் செய்வாரா என்று தெரியவில்லை.. ஆனால், ராதிகாவுக்கு கிராமப்புறங்களில் நிறைய செல்வாக்கு இருக்கிறது.. சரத்குமாருக்கான நாடார் இன ஓட்டுக்கள் ஓரளவு வரும் என்றாலும், ராதிகாவுக்காக அந்த வாக்கு வங்கி ஓரளவு உயரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

சிரித்த முகம்
அது மட்டுமில்லை, இயல்பாகவே ராதிகா அனைவரிடமும் கேஷூவலாக பேசக்கூடியவர்.. பிரச்சாரங்களுக்கு செல்லும்போதெல்லாம், சிரித்த முகத்துடன், கிராமப்புற பெண்களுடன் சகஜமாக பேசி வாக்கு சேகரித்தது பிளஸ்ஸாக அமையும்.. அதுபோலவே இந்த முறையும் நடக்கும் என்று தெரிகிறது.

பிரச்சாரங்கள்
தமிழக அரசியலில் பெண் தலைவர்கள் மிகவும் குறைவுதான்.. கனிமொழி சீனியர் என்பதால், அவரை தவிர்த்து பிரச்சாரங்களில் நன்றாக பேசக்கூடியர் பிரேமலதா விஜயகாந்த்.. குஷ்புவின் பேச்சு இயல்பாக இருக்கும் என்றாலும், அவ்வளவாக காரசாரமாக இருக்காது.. இது பிரேமலதாவிடம் உள்ளது.. இவரது பேச்சை கடந்த முறை பிரதமர் மோடியே வியந்து பாராட்டினாராம்.. அதேபோல பிரச்சாரங்களில் சில சொதப்பல்களை செய்தார் என்பதை மறுக்க முடியாது.. இப்போது பிரேமலதாவுக்கு ராதிகா டஃப் தருவாரா? பிரச்சாரத்திலும் ராதிகா பிச்சு உதறுவாரா? சமகவுக்கு வலு சேர்க்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..!












Click it and Unblock the Notifications