டமடம.. டம் டமால் இடி சப்தத்துடன் 2ஆவது இன்னிங்ஸ்.. சென்னையில் மீண்டும் தொடங்கியது மழை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 45 நிமிடங்களாக கனமழை பெய்துவருவதால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடந்த இரு தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தது. கடந்த 31, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் சென்னையில் அளவுக்கதிகமான மழை பெய்தது.
இந்த மழையால் வடசென்னை தத்தளித்தது. கடந்த இரு தினங்களில் மட்டும் 300 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த நிலையில் இரு தினங்களாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

படிப்படியாக மழை குறைவு
இந்த நிலையில் நேற்று மாலை படிப்படியாக மழை குறைந்தது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்தது, அதிகாலை முதல் சென்னையில் மழையே இல்லாமல் இருந்தது. இன்று காலையில் வெயில் எட்டி பார்த்தது. மக்கள் அவசர அவசரமாக துணிகளை துவைத்து போட்டு காய வைத்தனர்.

மேகக் கூட்டங்கள்
இந்த நிலையில் மேகங்கள் சென்னை டூ கடலூரில் இருந்து புதுவை, தென் தமிழகத்திற்கு சென்றுவிட்டதால் சென்னையில் கடந்த இரு தினங்களை போல் மழையின் அளவு இருக்காது என கணிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதற்கு முன்பே லேசான குளிர்ந்த காற்று வீசியது.

45 நிமிடங்களில் கனமழை
பின்னர் சிறிது நேரத்தில் மழை வெளுத்து வாங்க தொடங்கிவிட்டது. 45 நிமிடங்களாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையின் கே. கே. நகர் , வடபழனி, மேடவாக்கம், அனகாபுதூர், திநகர், கொடுங்கையூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூர், அயனாவரம், நுங்கம்பாக்கம் , கீழ்ப்பாக்கம், அண்ணா சாலை, பாலவாக்கம், பள்ளிக்கரணை, ஈசிஆர் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், வில்லிவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

புதுவையில் மழை
தென் சென்னையிலும் பரவலாக மழை பெய்தது. ஆனால் வடசென்னையை போல் பின்னி பெடலெடுக்கவில்லை. புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications