Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழுத்துல "சிலுவை".. பொறுக்கித்தனமான வார்த்தை.. "இலைமறைகாயாக"கூட இல்ல.. ராஜேஸ்வரி பிரியா யாரை சொல்றாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜேஸ்வரி பிரியா, நடிகர் விஜய்க்கான எதிர்ப்புக்குரலை பதிவு செய்துள்ளார்.. முதல்வேலையாக, ஹைகோர்ட்டுக்கு போய் வழக்கு போடப்போவதாகவும் அறிவித்துள்ளார். என்ன காரணம்?

விஜய்யின் லியோ பட 'நான் ரெடி' பாடல் வெளியாகி உள்ளது.. ஆனால், இந்த பாடல் ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகார்: சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ள நிலையில், விஜய் மீது கோரட்டில் கேஸ் போடப்போவதாக "அனைத்து மக்கள் அரசியல் கட்சி" தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னதன் சுருக்கம் இதுதான்:

"ஒரு பாடலை பாடும்போது, அதில் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்தி கொள்கிறார்.... ஏற்கனவே விஜய் என்ன சொன்னாரு, இனிமேல் சிகரெட்டை வாயில் வைத்து நடிக்க மாட்டேன் என்று சொன்னார்...

rajashwari priya slams actor vijay and going to file case against Director Lokesh kanagaraj

தலைவன்: "சர்க்கார்" படத்திலும் முதல் காட்சியே சிகரெட்டை வாயில் வைத்திருந்தார்.. அதற்கும் நான் எதிர்ப்பு தந்தேன்.. தன்னுடைய வாயால் பாடும் அளவுக்கு ஒருவருக்கு மனசாட்சி இருக்கிறதென்றால், அவரையெல்லாம் நான் மனுஷனாகவே பார்க்கலை.. அப்படியிருக்கும்போது, அவரை தலைவனாக பார்ப்பதெல்லாம் அடுத்த விஷயம்..
விஜய் அவர்களுக்கு கொஞ்சம்கூட சமூக பொறுப்பு கிடையாது.. இத்தனை இளைஞர்கள் அவரை பின்தொடர்கிறார்கள்.. ஒரு தலைவராக பார்க்கும் அளவுக்கு, அவரே தன்னை கிரியேட் செய்தும் கொள்கிறார்.. அப்படி இருக்கும்போது, அதற்கான அடிப்படை பண்பு ஏதாவது இருக்கணும்தானே?

பாடல் வரிகள் முழுவதும், மதுவை பற்றியும், புகைப்பிடிப்பது பற்றியுமே இருக்கிறது.. புகை பிடிச்சால், அவர்களுக்கு பவர் கிடைக்கிறதாம்.. "மில்லி உள்ளே போனால் கில்லி வெளியே வருதாம்".. என்ன வரிகள் இதெல்லாம்? விஜய்க்கு ரசிகர்கள் 3 வயதில் இருந்து இருக்கிறார்கள்.. மாஸ் ஹீரோவா அவரை பார்க்கிறார்கள்.. ஆனால், சமூகத்தின் மீதும் அக்கறை இருக்கணும் இல்லையா? "விரலுக்கு இடையில் தீப்பந்தம்"? என்ன இதெல்லாம்?

முழு கோளாறு: எதை பாடறோம் என்றுகூட தெரியாமல் பாடுவதா? பொறுக்கித்தனமான வரிகள்.. இதெல்லாம் ஒரு பாட்டா. இதை எழுதியது யாரோ அசல் கோளாறு எழுதினாராம்.. அவர் அசல் கோளாறு இல்லை.. முழு கோளாறு அந்த ஆளு.. இப்படியான கீழ்த்தரமான வரிகளை பாடுவதற்கு விஜய்க்கு எப்படி மனசு வந்தது?

கிறிஸ்தவர்கள்: சிலுவையை கழுத்தில் போட்டிருக்கிறார்.. சிறுபான்மையினர் கிறிஸ்தவ மக்கள் எல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கணும்.. விஜய் மீது வழக்கும் தொடரணும்..

ஒரு பாடலை பாடும்போது, தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்தி கொள்கிறார்.. ஒழுக்கத்தை கற்றுத்தரக்கூடிய மதமாகத்தான் எல்லா மதங்களும் உள்ளன.. ஒழுக்கக்கேடான விஷயத்தை, இப்படி மத அடையாளத்துடன் செய்கிறார்கள் என்றால், அதற்கு ஏதோ ஒரு இடத்தில், யாரோ, சப்போர்ட் தருகிறார்கள்.. சின்ன குழந்தைகளையும் சிகரெட் பிடிக்க வைக்கும், வியாபார நோக்கம்தான் இதில் தெரிகிறது..

விஜய் ரசிகர்களுக்கு என் மீது கோபம் வரலாம்.. ஆனால், இதை ஒரு அம்மாவாக சொல்கிறேன்.. புகைப்பிடித்தலுக்கும், தண்ணி அடித்தலுக்கும், கஞ்சாவுக்கும் எத்தனைய இளைஞர்கள் சீரழிந்துவிட்டார்கள்.. அந்த தாய்மார்களின் வேதனையை நீங்கள் புரிஞ்சிக்குங்க.. இதன்மூலம் ஒரே ஒரு மாணவன் வீணாக போனாலும், அதற்கு விஜய் பொறுப்பேற்பாரா? லோகேஷ் கனகராஜ் பொறுப்பேற்பாரா? கோடிக்கணக்கான ரூபாயை நீங்கள் சம்பாதித்துக் கொண்டு போய்டுவீங்க.. ஆனால், இங்கே சமூகம் சீரழியுதே? யார் பொறுப்பு இதுக்கு?

அசிங்கம்: ஒவ்வொரு நாளும், சொந்த செலவில் பணத்தையும் செலவு செய்து, சமுதாயத்துக்காக போராடிக்கிட்டு, வரும் எங்களை நீங்கள் அசிங்கமாக கமெண்ட் செய்றீங்க.. ஆனா டைரக்டர் சொல்றதை கேட்டுட்டு, உங்களையும் வீணாக்கிட்டு, பணம் சம்பாதித்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் உங்களுக்கு தலைவனா? ஒரு ஹீரோவா?

மாணவர்களுக்கு விருதெல்லாம் தந்தாரா விஜய்.. அதற்கும் இதற்கும் தொடர்புபடுத்தி பார்க்கலாமா? மாணவர்களை நேரில் சந்தித்தீர்களே, அந்த அரங்கத்தில் இந்த பாடலை உங்களால் பதிவிட முடியுமா? எத்தனை பேரின் சாபத்தை வாங்கிக்கிறீங்க.. தயவுசெய்து சமூக பொறுப்புடன் விஜய் நடந்து கொள்ளவேண்டும்.. அப்படி சமூக பொறுப்பு இல்லாவிட்டால், இந்த சமூகம், உங்களுக்கு சரியான பாடத்தை கற்பிக்கும்.

rajashwari priya slams actor vijay and going to file case against Director Lokesh kanagaraj

பொறுக்கித்தனம்: இலைமறைகாயாக வரிகள் இருந்தால் பரவாயில்லையே.. "எனக்கு பாட்டில்ல பத்தாது, அண்டாவுல கொண்டுவந்து குடு, குடிக்கிறேன்" என்றால், இதையெல்லாம் வெறும் சினிமாவாக பார்க்க முடியாது.. நான் இதற்காக வழக்கு தொடுக்க போகிறேன்.. அந்த பாடலை படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பொதுநலவழக்காக, சென்னை ஹைகோர்ட்டில் தொடர போகிறேன். இதற்கான சட்டப்போராட்டங்கள் தொடரும்.

எதை பற்றி பாடறோம் என்றுகூட தெரியாமல், பாடி வைப்பதா? எதுக்கு மாணவர்களுக்கு நீங்க விருது தர்றீங்க- இனிமேல் தராதீங்க.. சம்பாதிக்கக்கூடிய, பக்கா நடிகனாக மட்டும் இருந்துட்டு போயிடுங்க.. நடுநடுவுல சமூகத்துக்காக சிந்திக்கிறேன், ஆட்டோ தர்றேன், ஆம்புலன்ஸ் தர்றேன், விருது தர்றேன், இந்த கதையெல்லாம் இனி வேணாம்..

புரமோஷன்: இலவசமாக செய்றேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது போதும்.. ஆயிரம் கோடி ரூபாய் வாங்கிட்டு, ஒரு கோடி ரூபாய்க்கு செஞ்சுட்டால், மக்கள் வாயை மூடிட்டு போயிடுவாங்களா? இதையெல்லாம் அந்த படத்துக்கு புரமோஷனா நினைக்காதீங்க.. அந்த படமே வரக்கூடாது.

அரசு பள்ளிகள்: நீட் விலக்கு வரும் என்று நம்பி, எத்தனையோ பிள்ளைகள், எதிர்காலமே கேள்விக்குறியாக உட்கார்ந்துள்ளனர்.. ஆர்ட்ஸ் காலேஜூக்கு கூட அப்ளிகேஷன் போல.. அப்படியெல்லாம் இருக்கும்போது, உண்மையிலேயே பிள்ளைகளுக்கு உதவி செய்யணும் என்று நினைத்தால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 80 சதவீதத்துக்கு மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாமே? கல்வி செலவை ஏற்றுக் கொள்ளலாமே?

அதைவிட்டுவிட்டு, வைரநெக்லஸ் தர்றது, அதுவும் தொகுதி வாரியாக பிள்ளைகளை அழைத்து வந்து தருவது என்ன இதெல்லாம்? தொகுதி வாரியாக செய்வதற்கு நீங்க என்ன அரசியல் கட்சியா நடத்துறீங்களா? அரசியல் கட்சியை நடத்துவதற்கு முன்பாகவே, அரசியல் செய்கிறார் விஜய் என்றால், இவர் எவ்வளவு மோசமான மனநிலைமையில் அரசியலை அவர் பார்க்கிறார் பாருங்கள்" என்றார் ராஜேஸ்வரி பிரியா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+