சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க வாங்க.. "ஓகே" சொன்ன ரஜினி.. பாஜக வயிற்றில் புளி கரைக்கும் அந்த செய்தி.. அடுத்தடுத்து பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் "ஓகே" சொல்லிவிட்டது தான் பாஜக வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. சிஏஏவுக்கு எதிராக முஸ்லீம் பிரதிநிதிகள் ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி கோரிக்கை வைக்கப்பட.. அதற்குதான் ரஜினிகாந்த் ஓகே சொல்லியதாக தகவல்கள் பரபரக்கின்றன.

Recommended Video

    Rajinikanth Tweets that he is ready to play any roll to maintain peace in country

    சிஏஏ சட்டம் பற்றி சரியான விளக்கத்தை தருகிறேன் என்று அபுபக்கர் ரஜினிகாந்த் வீட்டுக்கு போனார்.. உள்ளே போய் விட்டு வந்து ரஜினிகாந்துக்கு நன்றி சொன்னதாக வெளியே பேட்டி தந்தார். அடுத்ததாக, ஞாயிற்றுக்கிழமை மதுரையைச் சேர்ந்த ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்கள்.

    ஆனால் இவர்கள்தான் ரஜினி சிஏஏ பற்றி எதுவுமே தெரியாமல் பேசுகிறார் என்று குற்றஞ்சாட்டி இருந்தவர்கள். ரஜினிகாந்த்தை சந்தித்துவிட்டு வந்து ஃபார்முலா பேட்டிகளை இவர்கள் தந்திருந்தார்களே தவிர அவர்களுக்குள் என்ன பேசி கொண்டனர் என தெரியவில்லை. இப்போது ஒரு சில விஷயங்கள் கசிந்துள்ளன.

    என்ஆர்சி

    என்ஆர்சி

    சிஏஏ - என்ஆர்சி - என்பிஆர் = இவை யாவும் வெவ்வேறு கிடையாது, ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் இவைகளில் உள்ள ஷரத்துக்களினால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் மதகுருமார்கள் விளக்கி உள்ளார்கள் போல தெரிகிறது. அதேபோல ரஜினிகாந்த்தும் சில கேள்விகளை இது சம்பந்தமாக கேட்டிருக்கிறார்.. ஏனென்றால் இந்த சட்டதிருத்தங்கள் பற்றி ரஜினிகாந்த் படித்துள்ளார்.. அதனால்தான் மதகுருமார்களிடமே இதை பற்றி சந்தேகம், கேள்விகளை கேட்டுள்ளார்.

    மதகுருமார்கள்

    மதகுருமார்கள்

    அதனையும் இவர்கள் விளக்கமாக எடுத்து சொல்லி உள்ளனர்.. அப்போதுதான் இந்த சட்டங்களின் அபாயம் இவ்வளவு உள்ளதா என்று ரஜினிகாந்த்துக்கே தெரியவந்துள்ளது. இதன்பிறகு தனது நிலைப்பாட்டையும் ஓரளவு மாற்றி கொண்டு, "அப்படின்னா உங்க போராட்டங்கள் சரிதான்.. உங்கள் உணர்வுகள்தான்" என்று ரஜினி தெரிவித்திருக்கிறார்.

    நிச்சயம் வரேன்

    நிச்சயம் வரேன்

    உடனே மதகுருமார்களோ, இன்னமும் நாங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்ட நிகழ்வுகளை நடத்தி கொண்டிருக்கிறோம்.. நீங்கள் அந்த நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்றில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் அடுத்து ஒரு கோரிக்கையை வைக்க. உடனே "ஓகே.. அதுக்கென்ன.. ஏற்பாடு பண்ணுங்க. நிச்சயம் வரேன்" சொல்லி உள்ளாராம் ரஜினிகாந்த்.

    உருக்கம்

    உருக்கம்

    இதையடுத்துதான் அப்போதே ரஜினிகாந்த் ட்வீட் போட்டு.. "எப்போதும் அன்பும், ஒற்றுமையும், அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற மதகுருமார்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்று உருக்கமாக தெரிவிக்க காரணமாக இருந்தது!

    சமுதாய ஓட்டுக்கள்

    சமுதாய ஓட்டுக்கள்

    அதனால் எப்படியும் பொதுக்கூட்டம் அல்லது வேறு ஏதேனும் நிகழ்ச்சியை நடத்த உலமா சபை திட்டமிட்டு வருகிறது.. ஒருவேளை உறுதி தந்ததுபோல் ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் இந்த இஸ்லாமிய பெருமக்களின் அதிருப்தியில் இருந்து மிக எளிதாக, விரைவாகவே ரஜினிகாந்த் தப்பிக்கலாம்.. அதே சமயம் ஒரு சமுதாய ஓட்டுக்களை மொத்தமாக லட்டு போல அள்ளலாம்.

    காரணங்கள்

    காரணங்கள்

    ஆனால் இதை பாஜக எப்படி எடுத்து கொள்ளும்? நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ரஜினிகாந்த்துக்கு எந்த மாதிரியான நெருக்கடி வரும்? என்பதெல்லாம் இப்போதே நம்மால் யூகிக்க முடியவில்லை. எப்படியோ... ரஜினிகாந்த் இப்போதைக்கு ஓகே சொன்னதே போதும்.. இஸ்லாமியை பெருமக்களின் மன பொருமல்களை மட்டுமல்ல.. டெல்லியில் 42 பேரின் அநியாய பலிக்கான காரணத்தையும் இனி அவரால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும் என நம்புவோம்!

    English summary
    Rajinikanth is expected to attend an anti-CAA event hosted by Islamists
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X