ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார்னு சொல்றது இதுக்குதான்! மவுன்ட் ரோடில் வீடு வாங்கிய ரஜினி! செம: பிரபலம்
சென்னை: அதிகபட்சமான பேர், புகழை பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. பெரிய சம்பளம் வாங்கக்கூடிய நபராக இன்றும் உள்ளார்.. சூப்பர் ஸ்டார் பட்டத்தை இன்றும் தக்க வைத்து கொண்டிருக்கிறார்.. அவரது படங்கள் இன்றும் பெரிய கலெக்ஷனை எடுக்கக்கூடியவராக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.. அத்துடன் ரஜினி குறித்த நிகழ்வு ஒன்றையும் பேட்டி ஒன்றில் நினைவூட்டியிருக்கிறார்.
King voice என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த் ஒரேயொரு ஸ்கூட்டர் மட்டுமே வைத்திருந்தார்.. அப்போதெல்லாம் ரஜினி சார் யாரிடம் பேசினாலும், "எனக்கு தேவை ஸ்கூட்டர், அதுக்கு பெட்ரோல், எனக்கு 1 சிகரெட் பாக்கெட், 2 டீ இருந்தால் போதும்" என்றுதான் சொல்வாராம்.

இவ்வளவு மட்டுமே தனக்கு போதும் என்றிருந்தார் ரஜினி சார்.. அந்த எளிமைதான் இன்றும் அவரிடம் தொடர்கிறது. தன்னிடம் இவ்வளவு பணம், புகழ் உள்ளது என்பதை எங்கேயுமே அவர் காட்டிக் கொண்டதேயில்லை.. எங்கேயுமே திமிர்த்தனமும் அவரிடம் இருந்ததில்லை. தொழில் பக்தி என்பது ரஜினி சாரிடம் நிறையவே உண்டு..
எளிமை, தன்னடக்கம்
இந்த 74 வயதிலும், பல படங்களில் தொடர்ந்து நடிக்க, அவரால் மட்டுமே முடியும். அதிகபட்சமான பேர், புகழை பெற்றவர்.. பெரிய சம்பளம் வாங்கக்கூடிய நபராக உள்ளார்.. சூப்பர் ஸ்டார் பட்டத்தை இன்றும் தக்க வைத்து கொண்டிருக்கிறார்.. அவரது படங்கள் இன்றும் பெரிய கலெக்ஷனை எடுக்கக்கூடியவராக இருக்கிறார்.
தன்னிடம் அன்று வைத்திருந்த ஸ்கூட்டரில்தான் எல்லா ஷூட்டிங்குக்கும் ரஜினி சார் சென்று வருவார்.. அண்ணாசாலையில், அன்று ஜெமினி ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது.. இது ஆனந்த விகடன் குழுமத்தினுடையது..
ஒருநாள் அங்கு ஷூட்டிங் சென்றபோது, தாமதமாகிவிட்டது.. உடனே அங்கே புரடக்ஷனில் இருந்தவர்கள், ஏன் லேட்டு என்று கேட்டுள்ளார்கள்.. டிராபிக்கால் லேட்டாகிவிட்டது என்று ரஜினி சார் சொல்லி உள்ளார்..
கிண்டலடித்த நபர்கள்
உடனே அங்கிருந்த நபர், "ரஜினி மவுண்ட் ரோடிலேயே வீடு ஒன்றை வாங்கிவிட்டால் நல்லா இருக்குமே.. நேரத்துக்கு ஷூட்டிங்கும் வரலாமே" என்று சொல்லி கிண்டலடித்துள்ளார்.. இதைக்கேட்டு அங்கிருந்தவர்களும் சிரித்துள்ளனர்.. இது ரஜினி சார் மனதை பாதித்துள்ளது.. எப்படியாவது இதே இடத்தில் வீடு வாங்கிவிடுவது என்று நினைத்து கொண்டாராம்.
இதற்கு பிறகு சில வருடம் கழித்து, ஜெமினி ஸ்டுடியோ விற்கப்பட்டு, பல கட்டிடங்கள் கட்டப்பட்டன.. அதில் ஒரு கட்டிடத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து ரஜினி சார் வாங்கினார்.. அன்று மனதில் நினைத்ததை செய்தும் காட்டினார்..
16 வயதினிலே படம்
ஒருமுறை ரஜினி சார் ஆடியோ விழா ஒன்றில் பேசும்போது, 16 வயதினிலே படம் ரிலீஸுக்கு பிறகு, என்னை ஒரு படத்தில் நடிக்க அழைத்தனர். புரடியூசரிடம் அட்வான்ஸ் பணம் கேட்டதற்கு, ஷூட்டிங் வந்தால், அன்றைய தினமே பணத்தை தருவதாக சொன்னார். நானும் ஷூட்டிங்குக்கு காலையிலேயே சென்று, அட்வான்ஸ் கேட்டேன்..
அதற்கு அவர், நீ என்ன பெரிய நடிகனா? அட்வான்ஸ் தந்தால்தான் நடிப்பியா? இந்த படத்திலேயே நீ இல்லை என்று சொல்லிவிட்டார்.. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..
ஏ பரட்டை பரட்டை
சரி, வீட்டுக்கு திரும்பி செல்வதற்கு காரையாவது அனுப்புங்கள் என்று கேட்டதற்கு, அதெல்லாம் முடியாது, நடந்தே போ என்று சொல்லிவிட்டார்கள்.. ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து ராயப்பேட்டை புதுப்பேட்டை கார்டன் வரை நடந்தே சென்றேன்.. ரோட்டில் பஸ்ஸில் சென்றவர்கள் எல்லாம், "ஏ பரட்டை, பரட்டை" என்று கிண்டல் செய்தனர்.. அப்போதே மக்களால் தான் அங்கீகரிக்கப்பட்டுவிட்டேன என தெரிந்துவிட்டது.
ஆனால் அன்று முடிவு செய்தேன், இதே ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஃபாரீன் காரில், யூனிபார்ம் போட்ட டிரைவரை நியமித்து வரவேண்டும், காரிலிருந்து இறங்கும்போது, தனக்கு சல்யூட் வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.. அதேபோல செய்து காட்டினேன்" என்று ரஜினி சார் சொல்லியிருந்தார். இதுபோல எதையுமே ரஜினி சார் சொல்லாமல் செய்து காட்டக்கூடியவர்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications