மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு - ஜூன் 3ல் முடிவு
சென்னை: 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில் சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டன.

திமுக, காங்கிரஸ்
அதன் அடிப்படையில் திமுக 3 இடங்களில் போட்டியிடுவதாகவும் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாகவும் அறிவித்தது. அதன் அடிப்படையில் திமுகவை சேர்ந்த எஸ்.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோரை திமுக தேர்வு செய்தது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.

அதிமுக வேட்பாளர்கள்
அதேபோல் 2 இடங்களுக்கு போட்டியிடும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது. அந்த வகையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆர்.பரதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது.

வேட்புமனு தாக்கல்
கடந்த 27 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் மூவரும் வேட்புமனுவை சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக வேட்பாளர்கள் இருவரும், காங்கிரஸ் வேட்பாளரும் கடந்த 30 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்கள் அல்லாமல் 7 சுயேட்சைகள் மாநிலங்கலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

6 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு
வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 7 சுயேட்சைகளின் வேட்புமனுக்கள் எம்.எல்.ஏக்களின் முன்மொழிவின்றி தாக்கல் செய்யப்பட்டதால் அவை நிராகரிக்கப்பட்டன.

ஜூன் 3 தேதி...
வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் ஜூன் 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால் அன்று மாலை 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி











Click it and Unblock the Notifications