Raksha Bandhan: சகோதரருக்கு ராக்கி கயிறு கட்டப் போறீங்களா? பெண்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
சென்னை: உலகிலேயே உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இந்தியாவில் தான். அதில் அண்ணன் - தங்கை உறவு உன்னதமானதாகும். இதனை கொண்டாடும் வகையில் வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பெளர்ணமி நாளில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது வழக்கமாகும். ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவது வழக்கம்.
சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, ஆரத்தி எடுப்பதால், பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் செல்வ வளமும், வாழ்க்கை பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக அமையும் என்பது நம்பிக்கை. இந்த ரக்ஷ பந்தன் நாளில் பெண்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டும் போது 5 விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பாக கடவுள் கிருஷ்ணருக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக கடவுளின் அருளும், கருணையும் ஆண்டு முழுக்க கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பாக நல்ல நேரம் பார்ப்பது அவசியம். சுப முகூர்த்த நேரங்களில் ராக்கி கயிறு கட்டினால், சிறந்த பலன்ல்கள் கிடைக்கும்.
அதேபோல் ராக்கி கயிறு கட்டும் போது சகோதரர்கள் எந்த திசையில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை கட்டாயம் பார்க்க வேண்டும். சகோதரர்கள் கிழக்கு அல்லது வடக்கி நோக்கி அமர செய்து ராக்கி கயிறு கட்ட வேண்டும். அதேபோல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ராக்கி கயிற்றை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. சேதமடைந்த ராக்கி கயிறை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல் ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பாக சகோதரருக்கு ஆரத்தி எடுத்து அவரது நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். இதனை செய்யவில்லை என்றால், ரக்ஷா பந்தன் சடங்குகள் முழுமைப் பெறாது. ஆரத்தி எடுத்து பொட்டு வைப்பது தெய்வீக ஆசீர்வாதத்தை ஈர்க்கக் கூடிய சடங்குகளாகும். மேலும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது ஏன் என்ற கேள்விகளும் தமிழகத்தில் அதிகமாக எழுந்துள்ளது.
அதாவது கிருஷ்ணரின் கைகளில் உள்ள சுதர்சன சக்கரத்தை பயன்படுத்திய போது, அவரது விரல்கள் காயம் அடைந்தன. அந்த விரலில் ஏற்பட்ட காயத்தை திரெளபதி தனது துணியால் மறைப்பார். இதனால் நெகிழ்ச்சியடைந்த கிருஷ்ணர், எந்த துயரமான சூழல் வந்தாலும் உன்னை பாதுகாப்பேன் என்று உறுதி கொடுப்பார். அதற்கேற்ப திரெளபதியை கெளரவர்கள் அவமானப்படுத்தும் போது, கிருஷ்ணர் தோன்று காப்பாற்றுவார். இதன் அடையாளமாகவே ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications