யார் அந்த நபர்? வினோத போட்டியை அறிவித்த ராமதாஸ்.. நாளை மறுநாள் முடிவாம்!
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வினோதமான போட்டி ஒன்றை ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதோடு இந்த போட்டியின் முடிவை நாளை மறுநாள் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. வடமாவட்டங்களில் அதிக அளவில் நடந்த காரணத்தால் அதிமுக கூட்டணியில் இடம்பெறாமல் பாமக தனித்து நின்றது.
ஆனாலும், இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 1 மாவட்ட கவுன்சிலரை கூட வெல்லாமல் பாமக தோல்வியை சந்தித்துள்ளது. பா.ம.க. 47 இடங்களை ஒன்றிய கவுன்சிலில் பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கிய பாமகவிற்கு பெரிய பின்னடைவை இந்த தேர்தல் முடிவுகள் கொடுத்துள்ளது.

போட்டி
ஒரு பக்கம் பாமக கட்சியின் கூட்டணி, தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பூதாகரமாக சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்னொரு பக்கம் பாமக நிறுவனர் ராமதாஸ் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்துவதாக ட்விட்டரில் அறிவித்து இருக்கிறார். முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே உரையாடுவதற்கான போட்டி இது என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ் செய்துள்ள ட்விட்டில், எனக்கும், எனது நண்பருக்கும் இடையே நாளை தனித்தமிழ் பயன்பாடு சார்ந்து ஓர் ஆக்கப்பூர்வ போட்டி. நானும், அவரும் நாளை முழுவதும் எத்தனை முறை பேசினாலும் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் கலப்பின்றி பேச வேண்டும் என்பது தான் அப்போட்டி, என்று குறிப்பிட்டுள்ளார்.

தூய தமிழ்
அதுமட்டுன்றி முடிவை நாளை மறுநாள் உங்களுக்குச் சொல்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார். யார் பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசினார்கள் என்பதை அறிவிக்க போவதாக தெரிவித்து இருக்கிறார். நெட்டிசன்கள் பலர் இவரின் ட்விட்டிற்கு கீழே.. இது நல்ல போட்டி.. அருமையான விளையாட்டு.

மொழியின் பயன்பாடு
உரையாடலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை இப்படியும் கூட அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் யார் அந்த நண்பர். யார் அவர்?... உங்களுடன் தமிழில் மட்டும் பேச போகும் அந்த நண்பர் யார் என்றும் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications