Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணிப்பேட்டை: உலக தரத்தில் உருவாகும் டாடா-ஜாகுவார் கார்கள்! டாப் கியரில் தமிழகம்! அசத்தும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் இதற்கு முன்னர், புனே பகுதியில் மட்டும்தான் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. புனேவில் இந்த கார்கள் வெறும் அசெம்பிள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், நாட்டில் முதல் முறையாக ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை முழுமையாக தயாரிக்கும் தொழிற்சாலை ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 470 ஏக்கர் பரப்பளவில் டாடா உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலையின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலையை இன்று திறந்து வைத்துள்ளார்.

Ranipet Jaguar Tata Plant

தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் சார்பில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் துறை தொழில் பூங்காவில் ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2024ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டாடா தொழிற்சாலையை திறந்து வைத்து, உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்து, டாடாவின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தில் ஆலையின் முதல் காரை ஓட்டிப் பார்த்தார். நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+