ரத்தன்ஜி டாடா.. ரூ.250 கோடி நஷ்ட ஈடு.. மாடியில் விழுந்து கிடந்த ஏர் இந்தியா கருப்பு பெட்டி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்பு பெட்டி கிடைத்திருக்கிறது.. அதிலிருந்து டேட்டாக்களை மீட்க 15 நாட்கள் ஆகும்.. அது சம்பந்தமான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக தந்திருக்கிறார்கள்.. அந்த கருப்பு பெட்டியில்தான் விமானி பேசியது, முதல் என்ன நடந்ததுவரை என அதில் தெரியவரும்" என்று மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர், ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். விமானத்தில் இருந்த 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் வெடித்ததால் வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியிருந்ததால், மீட்பு பணிகள் சவாலாகவே இருந்தன.

Ratan tata ahmedabad air india boeing flight

மீட்புக் குழுவினர், விமானத்தின் கருப்பு பெட்டியை, மருத்துவக் கல்லூரியின் மாணவர் உணவு அரங்கின் மாடியில் கண்டறிந்துள்ளனர்..

உடல் பாகங்கள்

இந்த விபத்தில் 319 உடல் பாகங்கள், முழுமையான மற்றும் பகுதியளவு எச்சங்களாக மீட்கப்பட்டுள்ளன.. பெரும்பாலான உடல்கள் எரிந்து அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதால், அவைகள் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

இது விபத்துக்கு காரணம், தொழில்நுட்பக் கோளாறா? மனிதத் தவறா? அல்லது வேறு காரணங்களா? என்பதை கருப்பு பெட்டியை ஆய்வு செய்ததால்தான் தெரியவரும் என்கிறார்கள்.

வெள்ளை பெட்ரோல்

இந்நிலையில், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "வெள்ளை பெட்ரோல் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு இருந்துள்ளது.. 9 மணி நேரம் என்பதால், முழுமையாகவே எரிபொருளை நிரப்பியிருக்கிறார்கள். அதிக எரிபொருள் இருந்ததால்தான், அதிக உயிர்ச்சேதம் என்று முன்னாள் விமானிகள் முக்கிய காரணமாக சொல்லி வருகிறார்கள்.

அதேபோல, கடலில் விமானம் விழுந்திருந்தால் நெருப்பினால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்கிறார்கள்.. அதாவது, விபத்தைவிட, நெருப்பு பற்றியே பலரும் இறந்துள்ளார்கள்.. தீயில் தற்போது கருகி போயிருப்பதால், டிஎன்ஏ வைத்துதான் டெஸ்ட் எடுக்க உள்ளதாக சொல்கிறார்கள்..

லேண்டிங் கியர்

லேண்டிங் கியரின் சக்கரமே மேலே எழவில்லை என்றும், அதுகூட கட்டிடத்தில் இடித்திருக்கலாம் என்றும் விமானிகள் சொல்கிறார்கள்.. கடந்த 11 மாத காலமாகவே இந்த விமானத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. இந்த விமானத்தில் ஏற்கனவே குறைபாடுகள் இருந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொரு விமானி தன்னுடைய பேட்டியில், 2 என்ஜின்களிலும் ஒரே நேரத்தில் பறவை அடிச்சிருக்கலாம், அதனால்கூட என்ஜின்கள் பழுதடைந்து விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்.. இன்னொரு ஓய்வு பெற்ற விமானியோ, ஒரு என்ஜின் இருந்தாலே விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிடலாம் என்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பு நேற்று முன்தினம் கிடைக்கவில்லை..

கருப்பு பெட்டி டேட்டா

கருப்பு பெட்டி கிடைத்திருக்கிறது.. அதிலிருந்து டேட்டாக்களை மீட்க 15 நாட்கள் ஆகும்.. அது சம்பந்தமான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக தந்திருக்கிறார்கள்.. அந்த கருப்பு பெட்டியில்தான் விமானி பேசியது, முதல் என்ன நடந்ததுவரை அதில் தெரியவரும்.

டாடா குழுமம் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி வரை நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.. உயிர் போனது போனதுதான், திரும்பி வராது.. ஆனால், அரசாங்கம் செய்ய வேண்டியதை டாடா செய்கிறது.. இந்தியர்கள் எப்போதும் மென்மையானவர்கள்தானே. பெருந்தன்மையுடன் டாடா இதனை செய்கிறது. ரத்தன் டாடா மறைந்தபிறகும் அந்த நிறுவனங்கள் அவருடைய மனநிலைமையில் உள்ளது பெரிய விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+