நோட் பண்ணிக்குங்க "1800 599 5950".. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பறந்து வந்த செய்தி.. இனி பிரச்சனையில்லை
சென்னை: ரேஷன் அட்டைதார்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களை பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும்.

இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் தொடர்ந்து நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டை இது என்பதால், மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
ரேஷன் அட்டை: குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளியூர்களுக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே கடந்த மே மாத இறுதியில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், "தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்குத் தொடர்ந்து அரிசி கடத்தப்படுகிறது. ஏழு வழித்தடங்கள் வழியாக, கார், பைக், லாரிகள் மூலம் அரிசியைக் கடத்துகிறார்கள். அந்த அரிசி ஆந்திராவிலுள்ள ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. எனது சொந்ததொகுதியான குப்பம் தொகுதியில், கடந்த 16 மாதங்களில் 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று எழுதியிருந்தார்.

சந்திரபாபு நாயுடு: சந்திரபாபு நாயுடுவின் அந்த கடிதம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதற்கு பிறகு, முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, இதுகுறித்து தீவிர நடவடிக்கையை எடுக்கும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தார்... இதையடுத்து, ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது.
ஏற்கனவே, ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ரேஷன் அரிசி கடத்தல்: அதிலும் உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தல் நடமாட்டம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஓரளவு தடுக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில், உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வி.ராஜாராமன், வெளியிட்ட செய்திக்குறிப்பில் சொல்லி உள்ளதாவது: பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொது விநியோகத் திட்ட பொருள்களைக் கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்தைச் செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications