ரேஷன் கடைக்குள்ளே யாரு பாருங்க.. ஆவேசமாக கதவை சாத்தி.. பூட்டு போட்ட மக்கள்.. அதிர்ந்த விழுப்புரம்
சென்னை: ஒரே நாளில் விழுப்புரமே பரபரப்பாகிவிட்டது.. ரேஷன் கடைக்குள் இருந்தவரை பார்த்து, போலீசார் திகைத்து போனார்கள்.. என்ன நடந்தது?
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. ரேஷன் பொரட்களை பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டபடியே உள்ளது..

அதிகாரிகள்: இதைத்தவிர, உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.
அதேபோல, ரேஷன் கடைகளுக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.. குறிப்பாக, எந்த காரணம் கொண்டும் ரேஷன் பொருட்கள் கடைகளில் தேங்கியிருக்க கூடாது, தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,
ரேஷன் பொருட்கள்: காரணம், ரேஷன் அட்டைதாரர்கள் சிலர், தங்களது ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை வாங்குவதில்லையாம்.. இந்த பொருட்களை சிலர் கள்ளத்தனமாக விற்றுவிடுவதாகவும் புகார்கள் வந்ததால், பொருட்களை வாங்காமல் தாமதித்தால், அப்பொருட்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்படவேண்டும், ரேஷன் பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம்: இந்நிலையில், விழுப்புரத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்டது காந்தி நகர். இங்குள்ள ரேஷன் கடையில் சந்திரமோகன் என்பவர் சேல்ஸ் மேனாக வேலைபார்த்து வருகிறார்.. இந்நிலையில், காலை 9 மணிக்கே ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க அப்பகுதி மக்கள் கடை முன்பு வந்து நின்றிருந்தனர். ஆனால், சந்திரமோகன் ரேஷன் கடைக்கு வரவில்லை..
காலையில் வரவேண்டியவர், 3 மணி நேரம் தாமதமாக அதாவது 12 மணிக்குத்தான் கடைக்கு வந்துள்ளார். இதனால், பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.. இருந்தாலும், சந்திரமோகன் ரேஷன் கடைக்குள் நுழையும்வரை காத்திருந்தனர்.. சந்திரமோகன் கடைகயை திறந்து உள்ளே சென்றதுமே, கடைக்குள் வைத்து பூட்டிவிட்டனர். பிறகு, ஜன்னல் வழியாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை: ரேஷன் கடை ஊழியரை, கடைக்குள் சிறைப்பிடித்த சம்பவம், திருவெண்ணெய்நல்லுார் போலீஸாருக்கு எட்டிவிட்டது.. இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றார்கள்.
அதற்கு பொதுமக்கள், "ரேஷன் பொருட்களை எங்களுக்கு சரியாக விநியோகம் செய்வது கிடையாது.. அரிசி, பருப்பு, இப்படி எல்லாவற்றையும் வெளிநபர்களுக்கு விற்றுவிடுகிறார்கள்.. இருக்கும் பொருட்களையும், எங்களுக்கு முறையாக தருவதில்லை.. கடையையும் நேரத்திற்கு திறப்பதில்லை" என்று குற்றஞ்சாட்டினார்கள்.
இதைக்கேட்ட போலீசார், இதுதொடர்பான புகார்களை, வட்ட வழங்கல் அலுவலரிடம் அளிக்கும்படி அறிவுறுத்திவிட்டு, கடைக்குள் இருந்த சந்திரமோகனையும் மீட்டுவிட்டு கிளம்பி சென்றார்கள்.












Click it and Unblock the Notifications