ரேஷனில் மாற்றம்.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி.. ஆனாலும் பி.எஸ்.ஓ மிஷின் திட்டத்தில் சிக்கலா?
சென்னை: ரேஷன்தாரர்களுக்கு ரேஷன் பொருட்களை சரியான எடையில், விரைந்து தர வேண்டும் என்பதற்காகவே பிஎஸ்ஓ இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது.. ஆனால், இந்த பிஎஸ்ஓ மிஷினுடன் தராசு இணைப்பு திட்டத்தால் கார்டு பதிவு செய்து பொருட்கள் வழங்குவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாம். இதுகுறித்து ரேஷன்காரர்களும், ரேஷன் கடை ஊழியர்களும் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர். குறிப்பாக விழுப்புரத்தில் இந்த வேண்டுகோள் எழுந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் பிஎஸ்ஓ மிஷினில் கைரேகை பதிவு செய்து அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இவை சரியான எடையில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பிஎஸ்ஓ மிஷினில் தராசு இணைக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுநாள்வரை, ஊழியர்கள் தங்கள் செல்போனில் வைஃபை மூலம் இணைப்பு கொடுத்து பொருட்களை வழங்கி வந்தனர். ஆனால், நெட்வொர்க் கிடைப்பது சிக்கல் எழுந்ததால், பிஎஸ்ஓ இயந்திரம், தராசு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎஸ்ஓ இயந்திரம், தராசு இணைப்பு கொடுக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.
பிஎஸ்ஓ இயந்திரம்
இதன்படி, பொருட்கள் வழங்குவதற்கு முன்பு பிஎஸ்ஓ இயந்திரத்துடன் எடைபோடும் தராசையும் இணைக்கப்பட உள்ளது. எடை தராசு நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், தராசில் உள்ள பொருட்களின் எடை அளவுக்குதான், பில்லும் வரும்.
ஆனால், பிஎஸ்ஓ மிஷினுடன் தராசு இணைப்பு திட்டத்தால், சரியான எடையில் பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது.. ஆனால், அரிசி, பருப்பு, சர்க்கரை என ஒவ்வொரு பொருட்களுக்கும் கார்டுதாரர்களிடம் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்பதால், கார்டுக்கு 20 நிமிடங்கள் ஆகிறதாம்.. இந்த கால விரயத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
விழுப்புரம் ரேஷன் கடைகள்
இந்த நடைமுறை விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்களிலுள்ள ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், திண்டிவனம் ரேஷன் கடைகளில், பிஓஏஸ் இயந்திரத்தை தராசுடன் இணைக்கும் திட்டத்தில், ரேஷன் அட்டைதாரர்களும், ரேஷன் கடை ஊழியர்களும் புதிய கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
அதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் 1328 ரேஷன் கடைகளில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன்தாரர்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் என அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறைவான கார்டுகள்
தற்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பிஎஸ்ஓ மூலம் கைரேகை பதிவு வைத்து, எடை போடும் தராசு மெஷினில் பொருட்கள் வழங்கும்போது எடை குறைவாக உள்ளதாக ரேஷன்தாரர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
அதேபோல, பிஎஸ்ஓ புதிய நடைமுறையில், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், கைரேகை பதிவு சரி என்று வந்த பிறகுதான் பொருட்களை வழங்க முடியும் என்பதால், குறைவான கார்டுகளுக்கு மட்டுமே தங்களால் பொருட்களை வழங்க முடிகிறது என்று ரேஷன் கடைக்காரர்கள் கூறுகிறார்கள். வழக்கமாக ஒரு நாளைக்கு 100 கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், இப்போது வெறும் 40க்கும் குறைவான கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.,
நெட்வொர்க் பிரச்சனை - கோரிக்கை
இன்னும் பல கிராமங்களில் நெட்வொர்க் பிரச்சனையால் பிஎஸ்ஓ இயந்திரம் சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதாம்.. இதன்காரணமாக பொருட்களை வழங்க தாமதம் ஏற்பட்டு, கூட்ட நெரிசலும் ஏற்பட்டு கார்டுதாரர்கள் தகராறில் ஈடுபடுகிறார்களாம்.
எனவே, பிஎஸ்ஓ இயந்திரத்துடன் எடை போடும் தராசு மெஷினை இணைப்பதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்று ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications