Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச ரேஷன் அரிசியுடன், இந்த "பொருளும்" திடீர் நிறுத்தம்.. எகிறிய பருப்பு விலை.. மத்திய அரசின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அரிசி கோதுமை, மாநிலங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளன.. அத்துடன், நாட்டில் பருப்புகளின் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதால் பருப்பு விலை திடீரென உயர்ந்திருக்கிறது... இதற்கு என்ன காரணம்? மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

நாட்டில் பருப்புகளின் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதால் பருப்பு விலை கடகடவென உயர்ந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், பருப்பு பதுக்கலை தடுக்கும்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பருப்பு விலை: நாடு முழுவதும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் கொள்முதல் குறைந்து இருப்பதனால், பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது..

நுகர்வோர்களுக்கு எளிதாக பருப்பு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து மாநிலங்களில் இருக்கும் பருப்புகளின் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது.

Ration rice, wheat and central government sudden decision free ration bans sale of cheap wheat and rice

மெட்ரிக் டன்: முன்னதாக, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் இருப்பு நிலையை பற்றி, ஆய்வு செய்வதற்கான கூட்டம் நடத்தப்பட்டது.. அதன்படி, வரும் அக்டோபர் 31ம் தேதி வரைக்கும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த விற்பனையாளர்களுக்கான பருப்பு இருப்பு வரம்பு 200 மெட்ரிக் டன் என்றும், சில்லறை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு 5 மெட்ரிக் டன்னாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.

இணையதள பக்கம்: அதுமட்டுமல்ல, விற்பனையாளர்கள் அவ்வப்போது பருப்புகளின் இருப்பு நிலையை https://fcainfoweb.nic.in/psp என்கிற இணையதள பக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில், அரிசி மற்றும் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவும், தட்டுப்பாடு காலங்களில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், அரிசி மற்றும் கோதுமையை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. ஆனால், இவை தனியார் விற்பனையாளர்கள், மொத்தமாக வாங்குவோர் உட்பட மாநில அரசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன...

விற்பனை நிறுத்தம்: 2023ம் ஆண்டுக்கான வெளிச்சந்தை விற்பனை திட்ட கொள்கையின்படி, மாநில அரசுகளுக்கு ஒரு குவின்டால் அரிசி 3,400 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டது.. ஆனால், பருவமழை தாமதம் மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால்தான், மாநிலங்களுக்கான விற்பனையை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் (OMSS) சென்ட்ரல் பூல்லில் இருந்து, மாநில அரசுகளுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது பரபரப்பான சம்பவமாக பேசப்படுகிறது.. 15 ஆண்டுகளில் முதல் முறையாக, கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கோதுமைக்கான இருப்பு வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது.

கோதுமை விற்பனை: திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் முதல் கட்டமாக மொத்த நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 1.5 மில்லியன் டன் கோதுமையை விற்கவும் அரசு முடிவு செய்துள்ளது... மேலும், இந்த வரம்பு 2024 மார்ச் 31 வரை வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லறை சங்கிலி விற்பனையாளர்களுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை தவிர திறந்த சந்தை விற்பனைத்திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.. இதற்கான அளவு பிறகு அறிவிக்கப்படும் என்கிறார்கள்.. ஆனால் அதேசமயம், தொடர்ந்து அதிகரித்து வரும் கோதுமையின் விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பயனில்லாமல் உள்ளது.. எனவேதான், நிலைமையை கட்டுப்படுத்தவும், வரத்து அதிகரிக்கவும், இருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாம்.

கையிருப்பு: அந்தவகையில், மொத்த விற்பனையாளர்களுக்கு 3,000 மெட்ரிக் டன்களும், சில்லறை விற்பனையாளர்களுக்கு 10,000 மெட்ரிக் டன்களும் கையிருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+