காங்கிரஸை ஸ்டாலினிடம் அடமானம் வைத்த செல்வப்பெருந்தகை! இதோட நிறுத்திக்கனும்..ஆர்பி உதயகுமார் வார்னிங்
சென்னை: சுயநலத்திற்காக காங்கிரஸ் பேரியக்கத்தை, மு.க.ஸ்டாலின் காலில் அடமானம் வைத்து விட்டார்கள் எனவும், பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விமர்சனம் செய்த போது காங்கிரஸ் கட்சியினர் மௌன விரதம் இருந்தது ஏன்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை திமுக கபளீகரம் செய்து விட்டதாக விமர்சித்து இருந்தார்.
இதை அடுத்து எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரது உருவ பொம்மையை எரித்தும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஆர்.பி. உதயகுமார்
இந்த நிலையில் சுயநலத்திற்காக காங்கிரஸ் கட்சியை மு.க.ஸ்டாலின் காலில் செல்வப் பெருந்தகை அடமானம் வைத்து விட்டதாக விமர்சித்திருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்: "நூறாண்டுகள் பாரம்பரியம், வரலாறும் கொண்ட இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் பேரியக்கத்தை இன்று திமுகவின் ஊதுகுழலாக, ஜால்ராவாக மாற்றிய பெருமை செல்வப் பெருந்தகைக்கு உண்டு. இன்றைக்கு அதிமுகவைப் பற்றி எடப்பாடியாரைப் பற்றி ஒரு தவறான கருத்தை, வெறும் வாயில் அவல் கிடைத்தது போல தவறான கருத்தைச் சித்தரித்துக் கதைகள், கட்டுரைகள் எழுதி விமர்சனம் செய்து கொண்டிருப்பதை ஒரு நாளும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
செல்வப் பெருந்தகை விமர்சனம்
திமுகவின் ஊதுகுழலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பணி செய்வது என்று கடமையாக நினைத்து செஞ்சோற்றுக் கடனை செலுத்தும் வகையில் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை செல்வப் பெருந்தகை அடமானம் வைத்து விட்டார் என்பதை தமிழ்நாடு பார்க்கிறது. இன்றைக்கு நீங்கள் ஐந்து கட்சிக்குப் போய் வந்தவர்கள் அதே போல செந்தில் பாலாஜியும் ஐந்து கட்சிக்குப் போய் வந்தவர். இப்படி பல கட்சிகளுக்குப் போய் வந்தவர்களைப் பெரிய பதவி கொடுத்து அழகு பார்ப்பது திமுகவும், காங்கிரஸும்தான்.
காமராஜர் விவகாரம்
மக்களுக்காக அரிய சேவை செய்து கல்வி வளர்ச்சிக்கும், நீர் மேலாண்மைக்கும், தொழில் வளர்ச்சிக்கும் வித்திட்ட கர்மவீரர் காமராஜரைப் பற்றி திருச்சி சிவா, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் வாய்க்கு வந்தபடி விமர்சித்து, எளிமையின் அடையாளமாக இருந்த காமராஜரை ஏசி இல்லாமல் உறங்க மாட்டார் என்று கருணாநிதி சொன்னதாகக் கருத்தைச் சொன்னபோது அப்போது மௌன விரதம் இருந்தது காங்கிரஸ் கட்சி. தற்போது எடப்பாடியைப் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருகிறீர்கள். மேலும் அருவருக்கத்தக்க வகையில் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் பேசுகிறீர்கள்.
எடப்பாடி பொம்மை எரிப்பு
இதனால் எங்கள் மனம் வேதனை அடைகிறது. இதை ஆளும் அரசு கூட வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நீங்கள் புரட்சி பாரதம் தொடங்கி புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றில் பணியாற்றிவிட்டு தற்போது காங்கிரஸில் இணைந்து தலைவராகி உள்ளீர்கள். கருத்து சொல்கிறேன் என்ற அடிப்படையில் பிறரை அவமதிக்கக்கூடிய வகையில் பேசக்கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைச் சட்டசபையில் நீங்கள் அவதூறாகப் பேசிய சட்டசபைக் குறிப்பு இன்னும் உள்ளது. இதை எங்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்.
அதிமுக காங்கிரஸ் மோதல்
இன்றைக்கு எடப்பாடி பதில் சொன்னார் என்றால் அதற்கு நீங்கள் மாற்றுக் கருத்து சொல்லலாம். அதற்குப் பதிலாக அவர் உருவ பொம்மை எரிப்பது என்பது வரம்புக்கு மீறிய செயலாகும். இத்தோடு இதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம். நீங்கள் காங்கிரஸ் கட்சியை அடமானம் வைத்த காரணத்தால் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி காங்கிரஸ் பாரம்பரியத்தைக் காப்பாற்ற இன்றைக்குக் குரல் கொடுக்க வேண்டிய அவசிய நிலை வந்திருப்பது என்பது கண்கூடாகத் தெரிகிறது. உங்கள் சுயநலத்திற்காக காங்கிரஸ் பேரியக்கத்தை இன்றைக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காலில் அடமானம் வைத்திருப்பதை எந்த உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும், தமிழ்நாடு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை." என்றார்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications