டிடிவியுடன் டீல் பேசிய ஆர்பி உதயகுமார்? திருமங்கலத்தில் பரபர பஞ்சாயத்து! நாச்சியார் நச்சரித்தது ஏன்?
சென்னை: சசிகலாவை சந்தித்ததற்காக அமமுக பெண் நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கினார் என்ற தகவல், தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, "சசிகலாவை சந்திப்பது கொள்கை, கோட்பாட்டுக்கு எதிரான செயலா?" என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம், அமமுக - அதிமுக கூட்டணியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த நீக்கத்தின் பின்னணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளார் என்கின்றனர் நாச்சியாரின் ஆதரவாளர்கள்.
அமமுகவில் மாநில மாணவிகள் அணி செயலாளராக செயல்பட்டு வந்தவர் ஜீவிதா நாச்சியார். கட்சியில் ஒரு வருடத்திற்கும் மேலாக தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், கட்சி நிகழ்ச்சிகள், பிரசாரங்கள், அமைப்பு பணிகள் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் நேற்று சசிகலாவை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், டிடிவி தினகரன் ஜீவிதா நாச்சியாரை அமமுகவிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த வேகமான நடவடிக்கைதான் பல்வேறு சந்தேகங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

டிடிவி தினகரன்
இந்த விவகாரத்தின் பின்னணியை விசாரித்தபோது, டிடிவி தினகரன் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பாக, மதுரை திருமங்கலம் தொகுதியில் ஜீவிதா நாச்சியாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையில்தான், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் திருமங்கலம் தொகுதியில் நேரடியாக களமிறங்கி பணியாற்றி வந்துள்ளார். மக்கள் தொடர்பு, கட்சி வளர்ச்சி, பிரசாரம் என பல்வேறு பணிகளில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக - அமமுக கூட்டணி
ஆனால், தற்போது அதிமுக - அமமுக கூட்டணி அமைந்துள்ள நிலையில், திருமங்கலம் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த ஆர்.பி. உதயகுமாருக்கே ஒதுக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், தன்னுடைய அரசியல் எதிர்காலம் குறித்து ஜீவிதா நாச்சியார் கடும் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. திருமங்கலம் தொகுதி கிடைக்காது என்ற சூழலில், புதிதாக கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்துள்ள சசிகலாவை சந்தித்து, அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தேடும் முயற்சியாகவே இந்த சந்திப்பு அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜீவிதா நாச்சியார்
இந்த தகவல் டிடிவி தினகரனுக்கு தெரிய வந்ததும், அவர் எந்த தாமதமும் இன்றி ஜீவிதா நாச்சியாரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இது, "கட்சித் தாவல் முயற்சிக்கு முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கை" என்றும், "கூட்டணி அரசியலில் ஒழுங்கு கட்டுப்பாட்டைக் காட்டும் செயல்" என்றும் அமமுக தரப்பில் விளக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன என்றுதான் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
திருமங்கலம் அரசியல்
கோவில்பட்டி பகுதியில் போட்டியிட சீட்டு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மாணிக்கராஜாவும், அதிமுக - அமமுக கூட்டணி காரணமாக அந்த தொகுதி கடம்பூர் ராஜுவுக்கு ஒதுக்கப்படும் என தெரிந்ததும், அதிருப்தியில் திமுகவில் இணைந்துவிட்டார். இதேபோன்ற சூழலில்தான், ஜீவிதா நாச்சியாரும் தன்னுடைய அரசியல் வாய்ப்பை தேடி சசிகலாவை சந்தித்திருப்பார் என்றும், அதனை முன்கூட்டியே அறிந்த தினகரன் நடவடிக்கை எடுத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில், இந்த விவகாரம் தனிநபர் நடவடிக்கையைத் தாண்டி, கூட்டணி அரசியலில் சீட் பகிர்வு, விரக்தி, கட்சி தாவல் பல அரசியல் பரபரப்புகளை உண்டாக்கியுள்ளது.
சசிகலா
தனது சொந்த சித்தி என சசிகலாவை கூறி வந்த டிடிவி தினகரன் அவரை சந்திப்பதற்காக தனது கட்சி நிர்வாகியை நீக்கி உள்ளது சாதாரணமாக நடந்ததெல்லாம் இல்லை. இதற்கு பின்னணியில் ஆர்பி உதயகுமார் இருக்கிறார் என்கின்றனர். நாச்சியார் கடந்த சில மாதங்களாகவே திருமங்கலம் தொகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்கு தேர்தல் பணிகளை தொடங்கி இருந்த ஆர்பி உதயகுமார் இந்த செய்தி சென்றுள்ளது.
ஆர்பி உதயகுமார்
திருமங்கலத்தில் தான் போட்டியிட ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் அதிமுக -அமுமுக கூட்டணி அமைந்த பிறகும் ஜீவிதா நாச்சியார் வேலை செய்வது ஆர்பி உதயகுமாருக்கு பிடிக்கவில்லை. இதை எடுத்து எடப்பாடி பழனிச்சாமி மூலம் பாஜகவுக்கு சிக்னல் கொடுத்து, பாஜக டிடிவி தினகரனை கேள்வி கேட்டதால் தான் ஜீவிதா நாச்சியார் உடனடியாக கட்சிப் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார் என்கின்றனர். இந்த நிலையில் அதிமுக, டிடிவி தினகரன்,பாஜகவுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் திருமங்கலத்தில் ஜீவிதா நாச்சியாரை சசிகலா களம் இறக்குவார் என சொல்லப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications