வீட்டு லோன், பர்சனல் லோன், தங்க கடன்! எல்லாம் மொத்தமாக மாறிடுச்சே! குறித்து வச்சுக்கோங்க.. முக்கியம்
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இஎம்ஐ செலுத்துவதில் வீட்டு லோன், பர்சனல் லோன், தங்க லோன் உள்ளிட்ட 3 விதமான லோன்களின் அடிப்படை விதிகளை மாற்றி உள்ளது. அந்த 3 மாற்றங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மாற்றம் 1
வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. பலரும் எதிர்பார்த்த அறிவிப்பு வந்த நிலையில் வேறு ஒரு விஷயமும் மக்களுக்கு சாதகமாக மாறி உள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது.
அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது.0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது
இதெல்லாம் ராஜ யோகம்!
பொதுவாக ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி வங்கிதான் முடிவு எடுக்கும். அதாவது உங்களிடம் கேள்வி கேட்காமல் அவர்கள் முடிவு எடுத்து உங்களிடம் தெரிவிப்பார்கள்.
லோன் அடுத்தவர்களுக்கு இதில் குரல் எதுவும் கிடையாது. அவர்கள் முடிவு எதையும் எடுக்க முடியாது. அதன்படி இனிமேல், உங்களது ஒப்புதல் இல்லாமல் இதில் மாற்றங்களை செய்ய முடியாது. வீட்டுக்கடன் காலத்தை அல்லது EMI ஐ வங்கிகள் மாற்ற முடியாது. இதில் வங்கிகள் - லோன் வாங்கியவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
அதேபோல் வீட்டுக்கடன் காலத்தை உயர்த்த வேண்டும் என்று உங்களை வங்கிகள் வற்புறுத்த முடியாது. அதேபோல் EMI ஐ வங்கிகள் மாற்றுவதை பற்றியும் வங்கிகள் பிரஷர் கொடுக்க முடியாது. நீங்கள் சொல்லும் முடிவையே இனி வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அதாவது ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி நீங்கள் எடுக்கும் முடிவை வங்கிகள்ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்த்த விரும்பினால் உயர்திக்கொள்ளலாம். இஎம்ஐ காலத்தை உயர்த்த விரும்பினால் அதை உயர்த்திக்கொள்ளலாம்.
ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டு முறை ரெப்போ குறைக்கப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6% ஆக உள்ளது.
மாற்றம் 2
பர்சனல் லோனிலும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, மாதாந்திர தவணைகள் (இஎம்ஐக்கள்) மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கடன் வாங்குபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வழி வகுக்கும். வீட்டுக் கடன்கள், கார் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் மீதான எதிர்பாராத கட்டணங்களை, மாற்றங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீப காலங்களில் பல கடன் வாங்குபவர்கள் திடீர் EMI அதிகரிப்புகள், EMI செலுத்துவதற்கான கால நீட்டிப்புகள் மற்றும் தெளிவற்ற கடன் விதிமுறைகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதாவது நீங்கள் 10 ஆயிரம் இஎம்ஐ கட்டி வந்துள்ளீர்கள் என்றால் திடீரென.. உங்கள் வாங்கி இனி 15 ஆயிரம் கட்ட வேண்டும் என்று சொல்லலாம். அல்லது 1 வருட இஎம்ஐயை இனி ஒன்றரை வருடம் என்று கூட உயர்த்தலாம்.
இதை தடுக்கவே புதிய ரிசர்வ் வங்கி விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கடன் வாங்குபவர்களை இதுபோன்ற எதிர்பாராத மாற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின் கீழ் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
கடன் திருப்பிச் செலுத்தும் விதிகளில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன:
கடன் வழங்குபவர்கள் கடன் காலத்தை அதிகரிப்பதற்கு முன் கடனாளியின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
வட்டி விகித உயர்வு காரணமாக EMI அல்லது காலவரையறையில் ஏதேனும் மாற்றம்
இருந்தால் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
கடன் வாங்குபவர்கள் கடன் வழங்குவதற்கு முன் முழுமையான கடன் விவரங்களுடன்
ஒரு முக்கிய உண்மை அறிக்கையை (KFS) பெற வேண்டும்..
கடன் வாங்குபவரின் ஒப்புதல் இல்லாமல் தானியங்கு EMI அதிகரிப்பு அல்லது கால
நீட்டிப்புகள் செய்ய அனுமதி இல்லை.
முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் இன்னும் வெளிப்படையாக வேண்டும்.
கடன் அறிக்கைகளில் வட்டி மற்றும் மற்ற விதிகள் பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
முன்பு, வங்கிகள் உங்கள் EMIயை அதிகரிக்கலாம் அல்லது உங்களிடம் கேட்காமலேயே உங்கள் கடன் காலத்தை நீட்டிக்கலாம். இப்போது, கடன் வாங்குபவர்கள் இதில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். அவர்களை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது.
கடன் வாங்கும் போது வழங்கப்படும் முக்கிய உண்மை அறிக்கை (KFS) இப்போது அனைத்து கடன்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் தொகை எவ்வளவு? அனுமதிக்கப்பட்ட வட்டி விகிதம் எவ்வளவு? கடன் காலம் மற்றும் EMI விவரங்கள் என்ன? வட்டி விகிதம் என்ன? கடனுக்கான
மொத்த செலவு எவ்வளவு? மற்ற அனைத்து கட்டணங்கள் குறித்த விவரங்கள் முறையாக இதில் இடம்பெற்று இருக்க வேண்டும்.
தங்க லோன்
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பாக தங்க கடன் வழங்குவது தொடர்பான புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் நேற்று வெளியிடப்பட்டது. வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) போன்ற அனைத்து கடன் வாங்குபவர்களும் தங்க கடன் கொடுக்கும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய கடன் வழங்கும் நடைமுறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், வேகமாக பாதுகாப்பாக கடன்களை வழங்கவும் வசதியாக இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?
தங்கக் கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே வழங்கப்பட வேண்டும். தங்கத்தின் மதிப்பு எப்படி உள்ளது, அதன் தூய்மை எப்படி உள்ளது என்பதை மதிப்பிட வேண்டும்.. அதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும். கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
கடன் வாங்குபவர் அதை திருப்பி மீட்கும் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே தங்க நகை கடன் வழங்கப்பட வேண்டும். தங்க கடனுக்கான வட்டியை ஒருவர் முழுமையாக செலுத்துகிறாரா என்பதை மாதம் மாதம் கண்காணிக்க வேண்டும்.
தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க அனுமதிக்க கூடாது. தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு நகை கடன் வழங்க கூடாது. தங்க நகைகளை ஒரு வருடம் முடிவதற்குள் கண்டிப்பாக திருப்ப வேண்டும். 1 கிலோ விற்கு மேல் ஒரே நேரத்தில் தங்கத்தை அடகு வைக்க அனுமதிக்க கூடாது என்று ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications