அடுத்தடுத்த விசாரணைகளால் சூடு பிடிக்கும் சித்ரா தற்கொலை விவகாரம்.. விரைவில் உண்மைகள் புலப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சக நடிகை மற்றும் அண்டை வீட்டார்களிடம் ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது. இதனால் விரைவில் தற்கொலைக்கான காரணம் தெரியவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஹேம்நாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சித்ராவிற்கு திருமணம் நடந்து இரண்டு மாதத்திற்குள் தற்கொலை செய்த காரணத்தினால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. சித்ராவின் தாய், தந்தை, மாமனார் ,மாமியார் மற்றும் கணவருடன் விசாரணை முடிந்தது.

தனித்தனியாக விசாரணை

தனித்தனியாக விசாரணை

இந்த நிலையில் அவருடன் நடித்த சக நடிகை சரண்யா மற்றும் அண்டை வீட்டார்களிடம் இன்று விசாரணை நடைபெற்றது. முதலில் அண்டை வீட்டார்கள் 5 நபர்களிடம் இந்த விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு தனியாக சக நடிகை சரண்யாவிடம் நடைபெற்றது.

பணிச் சுமையா

பணிச் சுமையா

இதையடுத்து சித்ரா தற்கொலை செய்து கொண்ட தனியார் விடுதியில் ரூம்பாய் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்றது. இதில் சித்ராவின் தற்கொலைக்கு வெளியில் பணியின் போது ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடைபெற்றது.

வீடியோ படம்

வீடியோ படம்

சித்ரா, ஹேமந்தின் சந்தேக புத்தி குறித்து மாமனாரிடம் போனில் அழுது கொண்டே புகார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது போன்ற தகவல்களை சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் மறுத்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவேற்காட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை சித்ரா, ஹேமந்த், அவர்கள் இருவரது தாய், தந்தையருடன் முன்பதிவு செய்ய சென்ற வீடியோவையும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.

உறுதி செய்யப்படாத தகவல்கள்

உறுதி செய்யப்படாத தகவல்கள்

மேலும் யாரையோ காப்பாற்ற தன் மகனை கைது செய்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பெரிய இடத்து பிள்ளைகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிகின்றன.

கொதித்த ஹேமந்த்

கொதித்த ஹேமந்த்

சித்ரா இறப்பதற்கு முன்பு நள்ளிரவு வரை கலந்து கொண்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் தனியார் டிவி சேனலில் ஒளிபரப்பானது. இதில் சித்ராவும் குமரனும் நடனம் ஆடினார். ஒரு வேளை இந்த படப்பிடிப்பை, ஏற்கெனவே முத்தக் காட்சி, முதலிரவு காட்சிகளால் கொதித்து போன ஹேமந்த் பார்த்துவிட்டு சித்ராவிடம் ஏதேனும் பிரச்சினை செய்தாரா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் விசாரணையின் முடிவில்தான் சித்ராவுக்கு என்ன நடந்தது என தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+