Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பழைய கட்டிடங்களுக்கு செம "ஆப்பு".. அப்பார்ட்மென்ட் வீடுகள் நோட் பண்ணுங்க: தமிழக அரசு மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பழைய வீடுகள் இடிப்பது தொடர்பாகவும், புதிய வீடுகள் கட்டுவது தொடர்பாகவும், தமிழக அமைச்சர் அன்பரசன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சென்னை முழுவதுமே பழைய கட்டிடங்களின் நிலை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பயன்படுத்த தகுதியற்ற கட்டிடங்களை உடனடியாக இடிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது..

Reconstruction project in Chennai and demolish the 7142 old buildings, says Tamil Nadu Government

சேப்பாக்கத்தில் ஒரு பழைய கட்டிடம், 2014ல் இடிந்து விழுந்தது.. அதற்கு பிறகு, 2015ல், சென்னை மாநகராட்சி சார்பில், பழைய கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அபாயகரமான கட்டிடங்களுக்கும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதில், ஆபத்தான கட்டிடங்களை இடிக்கப்பட்டன.. பாரிமுனை சம்பவத்தை போல், இனிமேல் ஒரு சம்பவம் நடைபெறாத வகையில், மாநகராட்சி சாட்டையை சுழற்றி வருகிறது.

வீடுகள்: அந்தவகையில், வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த கட்டிடங்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. வார்டு வாரியாக, பொறியியல் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கின்றனர்.

இதில், வசிக்க தகுதியில்லாத கட்டிடங்களை இடிக்க, நோட்டீஸ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.. குறிப்பிட்ட நாளில் இடிக்காவிட்டால், மாநகராட்சியே இடித்து, அதற்கான செலவை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கவும் செய்கிறது.. அதையும் மீறினால், குற்றவியல் தண்டனை சட்டத்தில் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

கட்டிடங்கள்: சென்னை போன்ற நகரங்களில், நிலத்தின் விலை வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற நிலங்களில் பாரம்பரிய கட்டிடங்களை தொடர்ந்து பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், சென்னையில் மறு கட்டுமான திட்டத்தின்கீழ், புதிதாக 8,723 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பரசன் தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

பணி நியமன ஆணை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியே தேர்வு செய்யப்பட்ட, 7 பேருக்கு சுருக்கெழுத்து 'தட்டச்சர் நிலை - 3'க்கான பணி ஆணையையும், ஒருவருக்கு கருணை அடிப்படையில், பண வசூலாளர் பணிக்கான பணி பணிக்கான பணி நியமன ஆணையையும், அமைச்சர் வழங்கினார்.. பின்னர் இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

"மறுகட்டுமான திட்டத்தின்கீழ் மயிலாப்பூர் வன்னியபுரம், ஆண்டிமான்ய தோட்டம், பருவாநகர், நாட்டான்தோட்டம், ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் தாமஸ் ரோடு பகுதி - 1 மற்றும் பகுதி - 2, சுபேதார் தோட்டம், கங்கைகரைபுரம், பத்ரிகரை, வடக்கு கிரியப்பா சாலை, பெரியபாளையத்தம்மன் கோயில், அப்பாசாமி, எழும்பூரில் உள்ள பெரியார் நகர், எம்.எஸ்.நகர், வேம்புலியம்மன் கோயில் தெரு, சேப்பாக்கம் தொகுதியில் உள்ள கொய்யாதோப்பு, சிந்தாதிரிப்பேட்டை என்.என்.நகர், காக்ஸ்காலனி திட்டப்பகுதிகளில் உள்ள பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

அதேபோல், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம், அப்பாவு நகர் சுப்புபிள்ளை தோட்டம், கொளத்தூர் தொகுதியில் ராஜாதோட்டம், ஜமாலியா, வில்லிவாக்கம் தொகுதியில் காந்தி நகர், ராயபுரம் தொகுதியில் செட்டித்தோட்டம், துறைமுகம் தொகுதியில் பிஆர்என் கார்டன் திட்டப்பகுதிகளில் உள்ள மொத்தம் 7142 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 8723 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

அனுமதி: கட்டுமானம் நடைபெற்றுவரும் திட்டப்பகுதிகளில் மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பெருநகர வளர்ச்சி குழுமம், சுற்றுச்சூழல் போன்ற துறைகளிலிருந்து பெறவேண்டிய அனுமதியை பெறுவதற்காக பிரத்யேகமாக ஒரு தனி அலுவலர் கோட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+