'எது..போன ஆட்சியில் மழைநீர் தேங்கவில்லையா? ஜெயக்குமார் ரோட்டில் நீச்சலே அடித்தார்..' பாயும் அமைச்சர்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அடுத்த வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

டெலிகாம் சேவை
அப்போது அவர் கூறுகையில், "பேரிடர் காலத்தில் தடையில்லா தகவல் தொடர்பை உறுதி செய்யும் வகையில் BSNL, JIO Vodafone, airtel நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் 50 நடமாடும் டவர்கள் தாயார் நிலையில் உள்ளன. அதேபோல எரிபொருள் மற்றும் சிலிண்டர்கள் பொதுமக்களுக்குத் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளன.

உணவு பொட்டலங்கள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. தற்போது 22 நிவாரண முகாம்களில் 1,723 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 11,49,570 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ள 400 பகுதிகளில் 216 பகுதிகளில் இராட்த பம்புகள் மூலம் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது

சென்னை சுரங்கப்பாதைகள்
மழை நீரால் சூழப்பட்ட 16 சுரங்கப்பாதைகளில் 14 சுரங்கப்பாதைகள் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு சுரங்கப்பாதைகள் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் விழுந்த 116 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 1265 மருத்துவ முகாம்கள் மூலம் 38,780 பேர் பயனடைந்துள்ளனர். மழை பாதிப்பு தொடர்பாக இதுவரையில் 6,794 புகார்கள் வந்ததாகவும் அவற்றில் 2,840 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன" என்றார்

அதிமுக ஆட்சி
தொடர்ந்து அதிமுக குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கையும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டும் வகையில் சென்னையில் எந்த சம்பவங்களும் நிகழவில்லை. வயிற்று எரிச்சல் காரணமாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கடந்த மழைக் காலத்தில் தண்ணீர் தேங்காமல் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த கருத்துக்குப் பதில் அளித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வெள்ளம் இல்லாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எப்படி நீச்சல் அடித்தார் எனப் பதிலுக்குக் கேள்வி எழுப்பினார். மேலும், சென்னையில் குடிப்பதற்கான தண்ணீர் இல்லாமல் செய்தது கடந்த ஆட்சியில் தான் எனக் குற்றம் சாட்டினார்.

உதவி எண்கள்
தலைநகர் சென்னையில் மூன்றாவது நாளாக நேற்றும் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அடுத்து வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications