தம்பியிடம் மட்டும் ரிதன்யா சொன்ன ரகசியம்.. இந்த ரிப்போர்ட் மட்டும் வந்தால்.. கவின் குடும்பம் காலி!
சென்னை: ரிதன்யா தற்கொலைக்கு முன் தனது தம்பியிடம் மட்டும் கவின் பற்றி பல புகார்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் இந்த விவகாரத்தில் வரப்போகும் ரிப்போர்ட் ஒன்று வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிதன்யா வழக்கில்.. ரிதன்யாவிற்கு பாலியல் ரீதியாக அவரின் கணவர் கவின் கொடுமைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக கவின் அப்பாவிடம் இதை பற்றி மறைமுகமாக சொல்லியும் அவர்கள் வீட்டில் இதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரிதன்யா எதிர்கொண்ட கொடுமைகள்
அதாவது கவின் தனது மனைவியிடம் இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வற்புறுத்தி இருக்கிறார். அதோடு நிற்காமல் சில இழிவான செயல்களை செய்யவும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் இதை பற்றி ரிதன்யா தனது மாமியார், மாமனாரிடம் மறைமுகமாக சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் தனது தம்பியிடம் இதை பற்றி புகார் உள்ளார். உங்க மாமா தவறானவர் என்பது போல தம்பியிடம் மட்டும் கொஞ்சம் வெளிப்படையாக ரிதன்யா புகார்களை கூறி உள்ளார். ஆனால் அவர் சிறிய பையன் என்பதால் முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதில் ரிதன்யா கணவர் கவின் மிக மோசமான மனநிலை கொண்டவராக இருப்பார் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிதன்யா பிரேத பரிசோதனை
ரிதன்யா பாலியல் கொடுமை புகார்களையும் வைத்து இருக்கிறார் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அதில் பல ரகசியங்கள் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. ரிதன்யா தற்கொலை முடிவை எடுக்கும் முன் பேசிய ஆடியோ கவனம் பெற்றுள்ளது. தற்கொலை முடிவை எடுக்கும் சில வினாடிகளுக்கு முன் அவர் பேசி இருக்கிறார். அதை அப்பாவிற்கு அனுப்பி இருக்கிறார். தற்கொலைக்கு முன் பேசிய அந்தஆதாரம் மிக முக்கியமானது. மிக முக்கியமான மின்னணு ஆதாரம் அது. அதில் கணவர், மாமனார், மாமியார் என்று 3 பேர் மீதும் ரிதன்யா புகார் அளித்துள்ளார் .
மெண்டல் டார்ச்சர் யார் கொடுத்தார், உடல் ரீதியான டார்ச்சர் யார் கொடுத்தார் என்பதை எல்லாம் தெளிவாக பேசி உள்ளார். அந்த ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் போனில் இருந்தே போலீசார் எடுத்துள்ளனர். கோர்ட்டிற்கு கொடுத்துவிட்டனர். அங்கிருந்து லேபிற்கு சென்றுவிடும். அதை வைத்தே முடிவை கண்டுபிடிக்கலாம் என்பதால் வழக்கில் அவை முக்கிய ஆதாரங்களாக மாறி உள்ளன. இதோடு பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகும் சூழலில், கவின் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகிவிடும்.
ரிதன்யா தற்கொலை
ரிதன்யா தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. ரிதன்யாவுக்கும், கவினுக்கும் 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடந்தது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வால்வோ கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அண்ணாதுரையும், ரிதன்யாவின் தாயாரும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார்.கடைசியாக வீட்டிற்கு வந்த ரிதன்யா தனது கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். ஜூன் 28-ம் தேதி காலை 9.30 மணியளவில் ரிதன்யா தனது அப்பாவின் காரில் மொண்டிபாளையம் கோவிலுக்கு சென்றுள்ளார். காரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.












Click it and Unblock the Notifications