சூப்பர்.. இந்த 5 கோயில்களில் விரைவில் ரோப்கார் வசதி.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி..!
மிழகத்தில் 5 கோயில்களில் ரோப்கார் வசதி தொடங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 முக்கிய கோவில்களில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர், இந்துசமய அறநிலையத்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சொன்னதாவது:
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புனரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

முதியவர்கள்
திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோவில்களை தனியார் நிறுவனத்திடம் அளித்து, தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மருதமலை கோவிலில், முதியவர்களின் வசதிக்காகவே மின் தூக்கி அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

539 கோவில்கள்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கோவில்களில் கடந்த அதிமுக ஆட்சியில் 47 கோவில்கள் மட்டுமே பிரசித்திப்பெற்ற கோவில்களாக கருதப்பட்டன.. ஆனால் இப்போது 539 கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன.. அவற்றை சீரமைத்து மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முக்கிய மலைக்கோவில்களான திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக "ரோப் கார்" வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்..

தங்கம்
கோவில்களில் காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயனுமின்றி தேக்கி வைக்கப்பட்டுள்ளது, அதனால் அவை அனைத்தும் வைப்பு நிதியாக போடப்பட்டு அதில் வரும் வட்டியை, வைத்து, கோவில் பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். தமிழகத்தின் புராதன சிலைகள் 2 அமெரிக்காவிலும், 1 சிங்கப்பூரிலும் இருக்கின்றன.. அவைகளை கூடிய சீக்கிரம் தமிழகம் கொண்டு வரப்படும்..

108 கோவில்கள்
நம் மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முறையாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.. அவர்கள் இப்போது அது தொடர்பான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.. 180 கோவில்களில் இந்த கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று சேகர்பாபு தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications