ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளியை தூக்கிச் சென்று ரயிலில் அமர்த்திய எஸ்ஐ.. பாராட்டும் சுப்ரியா
சென்னை: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் எஸ்ஐ செய்த நெகிழ்ச்சியான காரியத்தை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு பாராட்டியுள்ளார்.
தமிழக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக உள்ளவர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு. இவர் மனிதம், மனிதநேயம், அன்பு, பாசம், நேசம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையிலான விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிருவார்.
அது போல் சுப்ரியா காலநிலை மாற்றம் தொடர்பாகவும் வீடியோக்களையும் கருத்துகளையும் வெளியிடுவது வழக்கம். இவரது ட்விட்டர் பக்கம் பெரும்பாலானோரால் பின்தொடரப்படுகிறது.

ரயில் நிலையம்
அந்த வகையில் தற்போது ரயில் நிலையத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து பாராட்டியுள்ளார். ரயில்வே போலீஸ் எஸ்ஐ சரவணன், இவர் விருத்தாசலத்தில் பணியில் இருந்து வருகிறார். அங்கு ரயிலில் பயணம் செய்ய ஒரு பயணி சக்கர நாற்காலியில் வந்தார். அவருடன் ஒரு வயதான பெண்ணும் வந்தார்.

சரவணன்
அப்போது அங்கிருந்த சரவணன் அந்த பயணியை வீல் சேருடன் தள்ளிக் கொண்டே அவர் ஏறும் கம்பார்ட்மென்ட்டுக்கு வந்தார். இதையடுத்து வீல் சேரிலிருந்து ரயில் பெட்டியில் ஏறியவுடன் அந்த நபரால் நடக்க முடியவில்லை. இதனால் சரவணன் அவரை தூக்கிக் கொண்டு உள்ளே அழைத்து சென்று உட்கார வைத்தார்.

குவியும் பாராட்டு
இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோவை வெளியிட்ட சுப்ரியா சாஹு, பயணிகளிடம் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இவரை போல் நிறைய பேர் மனிதநேயத்துடன் இருக்க வேண்டும் என சுப்ரியா பாராட்டியுள்ளார். சுப்ரியாவின் இந்த வீடியோவை பலர் பாராட்டியுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

நெட்டிசன்கள் கமென்ட்
நெட்டிசன் ஒருவர் கூறுகையில் நல்ல விஷயம்தான். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பதால் அந்த நபர் கண்ணியமாக கருதுவாரா என்பதை சிந்தித்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் சேவைகளை பயன்படுத்தும் வசதிகள் இந்தியாவில் ஏன் இல்லை. மாற்றத்தை கொண்டு வருவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய ரயில்நிலையங்களில் ரேம்ப் என சொல்லப்படும் சாய்வு பலகை வசதி ஏன் அமைக்கப்படவில்லை என மற்றொரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications