ரூ.1,600 கோடி சொத்து.. அமிதாப் பச்சன் பற்றி வேட்டையன் ரஜினி சொல்லாத கதை! 9 கம்பெனிகளில் முதலீடு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அவரது நண்பர் அமிதாப் ஆரம்பக் காலத்தில் எந்தளவுக்குக் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்தார் என பேசியிருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி அமிதாப்பச்சனுக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? அவர் எத்தனை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார் என்ற விவரத்தைத் தெரிந்து கொள்ளலாமா?
'வேட்டையன்' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த்தின் பேச்சு மூலம் டாக் ஆப் த டவுனாக மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். ரஜினி தனது நண்பர் அமிதாப் உடன் இணைந்து நடிப்பதற்குப் பல வாய்ப்புகள் வந்தபோது திட்டமிட்டுத் தவிர்த்ததாகவும் ஆனால், 'வேட்டையன்' கதை அவருக்குப் பொருத்தமாக இருந்ததால் அவர் உடனே நடிக்க சம்மதித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் பற்றி தெரியாத பல உண்மைகளை ரஜினி போட்டு உடைத்தார். அமிதாப்பச்சனும் ராஜீவ்காந்தியும் ஒன்றாக ஒரே பள்ளியில் சேர்ந்து படித்தவர். இந்திராகாந்தியும் அமிதாப் அம்மாவும் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். அமிதாப் தந்தை மிகப்பெரிய செல்வந்தர் என்றும் ஹிந்தி பண்டிட் மற்றும் கவிஞர் என்றும் தெரிவித்த ரஜினி, அந்தப் பணக்கார அடையாளம் எதையுமே வெளியே காட்டிக்கொள்ளாமல் பெற்றோர் கொடுத்த வெறும் 300 ரூபாயை வாங்கிக் கொண்டு மும்பைக்கு நடிக்கப் போனவர் என்று குட்டி ஸ்டோரி ஒன்றைச் சொன்னார் ரஜினி.
தொடர்ந்து பேசிய ரஜினி, "சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை வைத்துப் பல தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அது மிகப்பெரிய நஷ்டமானது. அடுத்து மிஸ் யுனிவர்ஸ் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அதுவும் தோல்வியடைந்தது. பல கோடிகள் நஷ்டம். கடைசியில் அமிதாப் வீடு ஏலத்திற்கு வந்தது. கார் டிரைவருக்கு கூட சம்பளம் தர முடியாமல் தவித்தார்.
அதன்பின்னர் அவரே போய் பல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சி வாய்ப்பை கேட்டுப் பெற்றார். மீண்டும் பணக்காரரானார். அப்படிப்பட்ட தைரியசாலி அமிதாப்" என்று பேசி இருந்தார். இதுவரை ரஜினி சொன்னது பழைய கதைதான். இப்போது அதே அமிதாப்பச்சனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது தெரியுமா? அவர் எவ்வளவு பிராண்டுகளில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா?
Hurun Rich List 2024 ஆம் ஆண்டு கணிப்பின்படி, அமிதாப்பச்சனின் நிகர சொத்து மதிப்பு சுமார் 1,600 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை நடித்துள்ள 200 படங்களில் மூலம் கிடைத்த வருமானத்தை 9 மிகப்பெரிய பிராண்டுகளில் முதலீடு செய்துள்ளார். அது மட்டும் அல்ல, அவருடன் நடிக்க வந்த பல மூத்த நடிகர்கள் இன்று சினிமா துறையிலேயே இல்லை. இவர்தான் காலம் கடந்து இன்றைக்கும் நிலைத்து நடிக்கிறார். இப்போது அவருக்கு 82 வயதாகிறது. இந்த வயதில் தமிழில் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து நடித்துள்ளார். ஆகவேதான் இந்தியப் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார்.
அமிதாப்பச்சன் 1995இல் நடிப்பதிலிருந்து தற்காலிக ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தான் ரஜினி சொன்னதைப்போல சுவிட்சர்லாந்து சென்று வீடு வாங்கி தனிமையில் வாழ்ந்துபார்த்தார். அப்போதுதான் அவர் , அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் (ABCL) என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்தார். தேரே மேரே சப்னே, மிருத்யுதாதா மற்றும் மேஜர் சாப் ஆகிய படங்களை ஏபிசிஎல் தயாரித்தது. நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் மிஸ் வேர்ல்ட் 1996 இல் முக்கிய ஸ்பான்சராக இருந்தது. அதையே ரஜினி 'வேட்டையன்' ஆடியோ விழாவில் கூறியிருந்தார்.
அடுத்ததாக சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கின் (IPTL) டென்னிஸ் அணியான சிங்கப்பூர் ஸ்லாமர்ஸை வாங்க அமிதாப்பச்சனும் யுடி குழுவும் 2025 இல் கூட்டுச் சேர்ந்தனர். OUE சிங்கப்பூர் ஸ்லாம்மர்ஸின் இணை உரிமையாளராக அமிதாப் மாறினார். அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றும் வெளியானது. இதைப் போன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி Ujaas Energy பங்கு வகிக்கிறார். இந்த நிறுவனம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
மேலும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் முகமாக மட்டும் அமிதாப் இல்லை. அவர் 2013 ஆம் ஆண்டு இந்த டெக் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளுக்காக 6.27 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். அதன் பதிப்பு 4 மாதங்களில் இவரது ஆரம்ப முதலீடு ரூ.6.45 கோடியாக உயர்ந்தது. இது மட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில், அமிதாப்பச்சனும் அவரது மகன் அபிஷேக் பச்சனும் கூட்டாகச் சேர்ந்து மெரிடியன் டெக்கிற்குச் சொந்தமான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஆன்லைன் கிளவுட் ஸ்டோரேஜ் இணையதளமான ஜிட்டுவில் முதலீடு செய்தனர். தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து ஜித்துவில் 125,000 டாலர் (தோராயமாக ரூ. 2 கோடி) முதலீடு செய்ததாக தி இந்து வெளியிட்டுள்ள செய்து மூலம் அறிய முடிகிறது.
எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, அமிதாப்பச்சன் 2014 ஆம் ஆண்டில் ஸ்டாம்பீட் கேபிட்டல் என்ற தரகு நிறுவனத்தில் 1.1 லட்சம் பங்குகளை வாங்க சுமார் ரூ.1.21 கோடி முதலீடு செய்தார். 2019 ஆம் ஆண்டில், Eduisfun இல் 28 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 200 கோடி) முதலீடு செய்தார். அப்போது இதில் முதலீடு செய்த பல ஏஞ்சல் முதலீட்டாளர்களில் அமிதாப்பச்சனும் ஒருவர். Eduisfun என்பது எட்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். இது 2014 இல் தொடங்கப்பட்டது.

Macmerise Celfie என்பது ஒரு வணிகப் பொருள் நிறுவனம். 2022 இல் 1 மில்லியன் டாலரை இது (தோராயமாக ரூ. 7 கோடி) திரட்டியது. அப்போது அமிதாப்பச்சனை இதன் முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்தார் என ஃப்ரீ பிரஸ் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவற்றை தவிர்த்து எகனாமிக் டைம்ஸ் படி, அமிதாப்பச்சன் 2011 ஆம் ஆண்டு 3 லட்சம் ஃபைனோடெக்ஸ் கெமிக்கல்ஸ் பங்குகளை வாங்கினார்.
2015 ஆம் ஆண்டில், அவர் ரசாயன நிறுவனத்தில் 1.5 லட்சம் பங்குகளை வாங்கியதன் மூலம் அவர் தனது பங்குகளை 5.58 சதவீதமாக உயர்த்தினார் என்று கூறியுள்ளது தி இந்து பிசினஸ் லைன். அந்த நேரத்தில், இந்த நடிகர் Fineotex கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது பெரிய பங்குதாரராக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications