பொங்கல் பரிசு ரூ.1000.. அதை விடுங்க.. இப்ப 4.40 லட்சம் பேராமே.. கூட்டுறவு துறை சொன்ன முக்கிய தகவல்
1000 ரூபாய் பொங்கல் பரிசை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று கூட்டுறவு துறை அறிவித்துள்ளது
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசாக வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது... இதுகுறித்து செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலவர் ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
பொங்கல் பரிசு பெற 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்கள் தகுதி பெற்றவர்கள் என்று கூறியிருந்த நிலையில், அதற்காக ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது...

ரேஷன் கடைகள்
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.. சென்னையில் மட்டும் 10,18,728 அட்டைதாரர்கள், தென்சென்னையில் 10,39,552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பொங்கலையொட்டி, ஒரு வாரம் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டது.. இதை பெரும்பாலான அட்டைதாரர்கள் வாங்கி செல்ல ஆர்வம் காட்டினார்கள்.. ஆனாலும், ஒருசிலர் 1000 பணம் வேண்டாம் என்று விட்டுவிட்டனர்...

Rs 1000
ஆனாலும் இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சொல்லும்போது, பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன... இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்... ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியிருந்தார். ஆனால், இந்த 1000 ரூபாய் பணத்தை, தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் வாங்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

1000 ரூபாய்
இதுகுறித்து, கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, "வடசென்னையில் 10,18,728 அட்டைதாரர்கள், தென்சென்னையில் 10,39,552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில், வடசென்னையில் 9 லட்சத்து 83,005 பேரும், தென்சென்னையில் 9 லட்சத்து 90,014 பேரும் ரூ.1000 வாங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்கவில்லை என்று தெரிகிறது.

ரிட்டர்ன் கணக்கு
அத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,026 அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 அட்டைதாரர்களும் திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 அட்டைதாரர்களும் ரூ.1000 பரிசு தொகுப்பு வாங்கவில்லை. 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகை, ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் அரசுக்கு திரும்பி வந்துள்ளதாகவும் கூட்டுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications