ரூ.4 கோடி யாருடையது? நயினார் நாகேந்திரனுக்கு பறந்த சம்மன்.. பெரிய சிக்கலில் நெல்லை பாஜக வேட்பாளர்
சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளதால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை தடுக்கும் பணியில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 6ம் தேதி இரவில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரூ.4 கோடி ரூபாய் சிக்கியது. உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்து செல்லப்பட்ட அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பணத்தை ரயிலில் எடுத்து சென்றதாக சென்னை புரசைவாக்கம் ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதோடு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக அவர்கள் போலீசில் கூறியுள்ளனர். இது நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
அதோடு இந்த ரூ.4 கோடி ரொக்கப்பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதா? ரயிலில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டது ஏன்? வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லபட்டதா? என பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு வருமான வரித்துறையினரும் விசாரணையை தொட்ஙகி உள்ளனர்.
இதற்கிடையே தான் தனக்கும், ரூ.4 கோடிக்கும் எந்த தொடர்பு இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லை லோக்சபா தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால் ஆளும் திமுக அரசால் தான் டார்க்கெட் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதன்தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவரும், சென்னையில் ஹோட்டல் நடத்தி வரும் கோவர்த்தனன் என்பவரின் பெயரும் வழக்கில் அடிபட்டது. அவரது ஹோட்டலில் இருந்து பணம் கொண்டு செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டில் ரொக்கப்பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கு தொடர்பாக ஏற்கனவே பாஜக நிர்வாகி கோவர்த்தனனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதாவது ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் மற்றும் ரெய்டில் கிடைத்த ஆவணங்கள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்மன் நயினார் நாகேந்திரனுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன் சம்மனை பெற்று கொண்டாலும் கூட தேர்தலுக்கு முன்பு ஆஜராக மாட்டார். ஏனென்றால் அது தேர்தலில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் நயினார் நாகேந்திரன் தேர்தலுக்கு பிறகே விசாரணைக்கு ஆஜராவார் என்று சொல்லப்படுகிறது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications