சென்னைக்குள் நீங்க எங்க போகணும்? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ரூ.40 தான் டிக்கெட்! புது வசதி!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு 40 ரூபாய் டிக்கெட் வசதியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு இப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது. இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள், அரசு பேருந்துகள்-164, ஆம்னி பேருந்துகள்-62 நிறுத்துவதற்க்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகள் வசதிக்காக இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள வசதி குறித்த விவரம் வருமாறு;

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா., இன்று (29.02.2024), தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக, நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40/- கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள், 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் 01.03.2024 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்விழாவின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.இரா. மோகன், மா.போ.க. இணை மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications