காதை கிழிக்கும் ஹாரன் சத்தம்.. வாகன ஓட்டிகளுக்கு "ஆப்பு".. ரூ.10,000 ரெடியா வைங்க..தமிழக அரசு அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மைகளை கருத்தில்கொண்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து துறை, இப்போதும் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
நம்முடைய நாட்டில் சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில், மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.. இதற்காகவே, ஏராளமான விழிப்புணர்வுகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

அந்தவகையில், ராஜ்மார்க்யாத்ரா என்ற புதிய மொபைல் ஃபோன் செயலியை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.. நெடுஞ்சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவே, இந்த செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பயணிகள்: இந்த செயலி, பயணிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதுடன், புகார் தீர்க்கும் முறையையும் வழங்கும்.. வானிலை அப்டேட், அருகிலுள்ள சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பம்புகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் என, தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் பிற அத்தியாவசிய சேவைகள் இந்த ஆப்பில் கிடைக்கிறது..
சிக்னல்கள்: வாகனங்கள் ஏதாவது நெடுஞ்சாலையில், வேகமாக பயணித்தால், ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிக்கப்பட்டு, டிரைவர்களுக்கு உடனே அலாரம் சிக்னல்கள் அனுப்பப்படும்.
சில மாதங்களுக்கு முன்பு, சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் எ.வ வேலு, ஒரு முக்கிய அறிவிப்பினை வெள்யிட்டிருந்தார்.. அதன்படி, தமிழகத்திலும், சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை, நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்க, மொபைல் ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக கூறியிருந்தார். இந்த ஆப் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சாலைகளில் விபத்துகள் கணிசமாக மேலும் குறையும் என்று நம்பப்படுகிறது.
ஹாரன் சத்தம்: இந்நிலையில், காதை கிழிக்கும் ஹாரன் சத்தத்திற்கும், அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆப்பு வைக்க போகிறதாம்.. பொதுவாக, சாலைகளில், அளவுக்கு அதிகமாக சத்தத்தை தரும், "மின்னணு ஹாரன்"களால் ஒலி மாசு அதிகமாகிறது.. இதனால், சாலைகளில் செல்வோர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
குறிப்பாக, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த, காதைக்கிழிக்கும் ஹாரன் சத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.. வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு ஹாரன்கள், 80 டெசிபல் அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு கட்டுப்பாட்டு வாரிய சட்ட விதியாகும். ஆனால், இந்த விதிமுறைகளை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. 100 டெசிபல் அளவுக்கு மேலே ஒலி எழுப்பும் ஹாரன்களை தங்கள் வண்டிகளில் பொருத்தியிருக்கிறார்கள்.
புகார்கள்: இந்த அதிக சத்தம் குறித்து, பொதுமக்கள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வந்தன.. அதனால்தான், தமிழக போக்குவரத்து துறை, மீண்டும் சாட்டையை கையில் எடுத்துள்ளது. அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் உள்ள அரசு, தனியார், ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, போக்குவரத்து ஆணையரகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் சொல்லும்போது, "பஸ்கள் உள்ளிட்ட இதர வாகனங்களுக்கு வருடந்தோறும் எப்சி எனப்படும் தகுதிச்சான்று வழங்கும்போது, ஒலி மாசு ஏற்படுத்தும் ஹாரன் இருந்தால் உடனடியாக அகற்றி விடுவோம்.. ஆனால், அவர்கள் எப்சி பெற்ற அடுத்த சில நாட்களிலேயே, தங்களுக்கு வசதியான, எலக்ட்ரானிக் ஹாரன்களை பொருத்தி கொள்கிறார்கள்.
நோ சான்ஸ்: இனிமேல், இதற்கெல்லாம் வாய்ப்பில்லை. தமிழகம் முழுதுமுள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து வகை பஸ்களிலும், சிறப்பு சோதனைகளை மேற்கொள்வார்கள்.. அதிக டெசிபல் உள்ள ஹாரன்கள் அங்கேயே அகற்றப்படும். அத்துடன், அந்த பஸ்களின் ஓனர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்றனர்.
முன்னதாக, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் லாரிகள் அதிக ஒலி எழுப்பும் 'ஏர்-ஹாரன்களை' பயன்படுத்துவதால், சாலையோரம் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கு பெருத்த தொந்தரவு ஏற்படுவதாக ஏற்கனவே புகார்கள் வந்தன..
சாலையில் பைக்குகளில் செல்பவர்கள் மற்றும் சாலையோரம் நடந்துசெல்பவர்கள், இந்த ஹாரன் சத்தத்தினால் அதிர்ச்சியில் சாலை விபத்துகளில் சிக்கி மரணமடைந்த சம்பவமும் நடந்துள்ளது. இதுகுறித்த புகார்களும், அரசுக்கு பறந்தபடியே இருந்தன. போக்குவரத்து துறையின் அதிரடி நடவடிக்கையும், ஸ்பாட் அபராதமும், தமிழக மக்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications