பொங்கலுக்கு ஸ்டாலினின் சர்ப்ரைஸ்.. இதோ விரைவில் ரூ.6000.. ரேஷன் கடைகளில் ஸ்பெஷலா ரெடியாகுதாமே.. மாஸ்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா, 6,000 ரூபாய் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.. ரேஷன் கடைகளில் அடுத்த வாரம் முதல், அந்தப்பணம் வழங்கப்பட உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.. எண்ணூரிலும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் துரிதமாகி கொண்டிருக்கின்றன.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள, 6,000 ரூபாய் நிவாரண தொகை, மக்களிடம் பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது... சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்கும் என்று அரசு தரப்பில் உறுதி கூறப்பட்டுள்ளது.
மழை வெள்ளம்: மழை வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்களில் நடுத்தர குடும்பமாக சிலர் இருந்தால் அவர்களும் தங்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து எழுதி கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.
பெரிய கருப்பன்: இந்நிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது, முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் சொல்லும்போது, "செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய, மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு தாலுகா வாரியாக நிவாரணம் வழங்கப்படும். வரும், 16ம் தேதி முதல், நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில், வீட்டுக்கடன் செலுத்துவோரின் சிரமம் குறித்து ஆலோசித்து வருகிறோம்.. அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். மின் பயன்பாடு கணக்கு அட்டை சேதமடைந்து இருந்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.. நிவாரண தொகை வழங்கும் முன்பு, கார்டுதாரர்கள் சிரமமின்றி வந்து செல்ல, ரேஷன் கடைகளில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
தனி கட்டுப்பாட்டு மையம்: கார்டுதாரர்களின் வீடுகளில், டோக்கன் வழங்குவது, நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

தினமும் ஒரு கடையில், 100 முதல் 150 பேருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும். நிவாரண தொகை தொடர்பாக புகார்களை பெற, தனி கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும். இந்த பணிகளை கண்காணிக்க, தனி குழுக்களை நியமிக்க வேண்டும்" என்று பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
1000 ரூபாய்: இதனிடையே, தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 மாதம்தோறும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பரிசு குறித்த பல்வேறு கேள்விகளும் எழுந்து வந்தது... வரும் ஜனவரி மாதம் ரேஷன் கடைகளின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேரடியாக ரூபாய் 1000 ரொக்க பணம் பொங்கல் பரிசாக வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தகவலானது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications