தனியார் பள்ளிகளில் இலவசமாக உங்கள் குழந்தைகளை சேர்க்க இன்றே கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தமிழ்நாட்டில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இன்னும் சில மணி நேரமே விண்ணப்பிக்க அவகாசம் இருப்பதால் உடனே விண்ணப்பித்தால், உங்கள் குழந்தைக்கான கல்வி கட்டணம் 8ம் வகுப்பு வரை மிகமிக குறைவாகவே இருக்கும். இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.) 2009ம் மத்திய அரசால் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்க சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகளே ஏற்கும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அரசு தான் கல்வி கட்டணம் செலுத்தும். இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பெற விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
விருப்பமுள்ள பெற்றோர்கள் https://rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். இன்னும் சில மணி நேரம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரே பள்ளியில் குறிப்பிட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் குவிந்தால், அந்த இடங்களுக்கு குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
குழுக்கல் நடைமுறை என்ன: குறிப்பிட்ட இலவச கல்வி சட்டத்தின் படி, தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ஆம் தேதி இணையதளத்தில் பள்ளிகள் வெளியிட வேண்டும். ஒரு ஊரில் ஒரு குறிப்பிட்ட தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த குலுக்கல் மே 28ஆம் தேதி அன்று பள்ளிகளில் நடத்த வேண்டியது கட்டாயம் ஆகும்,.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 2013-2014ஆம் ஆண்டு முதல் இந்தச் சேர்க்கை தொடங்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகிறாரக்ள். 2022-23ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 65946 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். 2023-24ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியுள்ள 70 ஆயிரத்து 883 குழந்தைகள் சேர்க்கப்பட்டுப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டிற்கு அரசால் 400 கோடி ரூபாய் தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications