ஒரு பவுனுக்கு கீழ் மற்றும் ஒரு பவுனுக்கு மேல் தங்க நகை வைத்துள்ளவர்கள் அறிய வேண்டிய அடகு ரூல்ஸ்
சென்னை: தங்க நகை அடகுவைக்க போகிறவர்கள் அறிய வேண்டிய லேட்டஸ்ட் விதிமுறைகள் மற்றும் தங்க நகை அடகு வைக்கும் போது வங்கிகள் மற்றும் தங்க நகை அடகு நிறுவனங்கள் மற்றும் தனியா நிதி நிறுவனங்கள் பின்பற்றும் நடைமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். குறிப்பாக ஒரு பவுனுக்கு கீழ் மற்றும் ஒரு பவுனுக்கு மேல் தங்க நகை வைத்துள்ளவர்கள அறிய வேண்டிய அடகு விதிகள் பற்றியும் பார்ப்போம்.
தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்று தொழில் தொடங்குகிறார்கள் பலர். அதேபோல் அவசரத்திற்கு கல்வி கடன் கட்ட வேண்டும் என்றாலும் மக்கள் தங்க நகைகளை அடகு வைக்கிறார்கள். மருத்துவ அவசரம், வீடு வாங்க, நிலம் வாங்க, அடுக்குமாடி குடியிருப்பு வாங்க, செய்முறை செய்ய, வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்த என பல்வேறு அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறுகிறார்கள். அப்படி தங்க நகைகளை அடகு வைக்க போகும் மக்கள், எங்கு வட்டி குறைவாக இருக்கும் என்பதை அறிந்து தான் அடகு வைக்க செல்கிறார்கள்.

பொதுவாக தங்க நகை அடகு வைப்பதை பொறுத்தவரை இந்தியன் வங்கி, கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுமே சிறந்தது. அதேபோல் உங்களுக்கு ஓரளவு குறைவான பணம் தான் தேவை என்றால், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கலாம். வட்டி அங்கு மிக குறைவாகவே இருக்கும்.
அதேநேரம் பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை குறைந்த வட்டி (9 சதவீதம்) மற்றும் நிறைய பணம் வேண்டும் என்றால் இந்தியன் வங்கியில் வைக்கலாம். அங்கு வட்டி குறைவாகவும் பணம் அதிகாகவும் கிடைக்கும். ஆனால் இந்தியன் வங்கியை பொறுத்தவரை இப்படி 3லட்சம் தான் வாங்க முடியும்.. அதற்குமேல் என்றால், நீங்கள் வழக்கமான பொதுத்துறை வங்கிகளில் உள்ள வட்டி மற்றும் பணமே கிடைக்கும். அன்றைய நாள் அடிப்படையில் தங்க நகை கடன் கிடைக்கும். ஆனால் பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை கடன் வாங்க வேண்டும் என்றால் ஒரு அரை நாள் அல்லது குறைந்தது 2 மணி நேரம் வங்கியில் காத்திருக்க வேண்டிய நிலை வரும்.
சிலர் விரைவாக கடன் வாங்க வேண்டும். சில மாதங்களில் திருப்ப போகிறேன் என்று நினைப்பவர்கள்.. அவர்கள் தனியார் வங்கியை நாடுகிறார்கள்.. அவர்கள் அடுத்த 10 நிமிடங்களில் கடன் பெறுகிறார்கள். வட்டி விகிதம் 10.5 சதவீதம் முதல் 11.5 சதவீதம் வரை உள்ளது. தனியார் வங்கிகளில் விரைவான சேவை இருக்கிறது. ஆனால் வட்டி சற்று அதிகம்.
அதேநேரம் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகையை அடகு வைக்க போனால் கிராமுக்கு அதிக கடன் கிடைக்கும். பல தனியார் மற்றும்அரசு வங்கிகளில் மொத்தமாக ஏலத்திற்கு வரும் நகைகளை சீட்டை வாங்கி மாற்றி வைக்க தனியார் நிதி நிறுவனங்களே உதவுகின்றன. அங்கு மாதம் மாதம் வட்டி கட்ட வேண்டியதிருக்கும். தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகை அடகு வட்டி விகிதத்தை பொறுத்தவரை 13.5 சதவீதம் ஆக உள்ளது. மாதம் மாதம் கட்டாயம் வட்டி கட்ட முடியாது என்றால், 24 சதவீதம் வட்டி விதிக்கப்படும். அதாவது இரண்டு வட்டி என்கிற அளவில் வட்டி விகிதம் இருக்கும். ஒவ்வொரு நாளும் வட்டி அதிகரிக்கும். அதிக பணம் தேவை. ஒரே மாதத்தில் திருப்ப போகிறார்கள் என்றால், அதாவது அவசரத்திற்கு கைமாற்று வாங்குவது போல் என்றால் தனியார் நிதி நிறுவனங்கள் சிறந்தவை.. மாலை 4 மணி வரை கடன் தருகின்றன. எனவே அவசர மற்றும் அத்தியாவசியமான சூழல் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை நாடலாம்.
அதேநேரம் ஒரு பவுன் தங்க நகைக்கு கீழ் உள்ளது என்றால், உங்களால் பொதுத்துறை வங்கிகளிலோ அல்லது தனியார் வங்கிகளிலோ அடகு வைக்க முடியாது. தனியார் நிதி நிறுவனங்களில் தான் வைக்க முடியும். குறைந்த பட்சம் ஒரு பவுன் தங்க நகைகளைத்தான் வங்கிகள் அடகுக்கு எடுக்கின்றன. எனவே இந்த விதி தெரிந்து கொண்டு தங்க நகைகளை அடகு வைக்க செல்லுங்கள்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications