சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னங்க இது.. சென்னையில் ஒரு கருப்பு பலூன் கூட விக்கலியாமே.. எதிர்க்கட்சிகளை கலாய்த்த எஸ்வி சேகர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கவனிச்சீங்களா.. ஊரே சொல்லுது GO Back MODI.. ஆனா திமுக கப்சிப்னு இருக்கே.. என்னவாம்?-வீடியோ

    சென்னை: என்னங்க இது ஒரு கருப்பு பலூன் கூட விக்கலியாமே என எதிர்க்கட்சிகளை கலாய்த்து எஸ் வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவில்லை என மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை.

    இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை #GobackModi என்ற வாசகத்தை முன்வைத்தன.

    மார்க்கம்

    மார்க்கம்

    இதை முன் வைத்து சென்னை விமான நிலையத்தில் போராட்டங்களை முன்னெடுத்தன. பின்னர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் மோடி சாலை மார்க்கமாக செல்லாமல் வான் வழியே தான் அடையும் இடத்துக்கு சென்றார்.

    கருப்பு பலூன்கள்

    கருப்பு பலூன்கள்

    இது போல் ஒவ்வொரு முறையும் மோடி தமிழகத்துக்கு வருகை தரும் போது கருப்பு பலூன்கள் பறக்கவிடுவது வழக்கம். தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த போதும் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை ஐஐடியில் 56ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி. ஆனால் நேற்றைய தினம் அவரது வருகைக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

    மரியாதை

    மரியாதை

    இதுகுறித்து பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை கிண்டலாக பதிவிட்டிருந்தார். அவர் கூறுகையில் என்னங்க இது. சென்னை பலூன்காரங்களுக்கு வந்த சோதனை.

    பயம் கலந்து மரியாதை

    ஒரு கருப்பு பலூன் கூட விக்கலியாமே.😆புரோகிதர் பேச்சுக்கு அவ்வளவு பயம் கலந்த மரியாதை ஜி.🦜Welcome OUR HONOURABLE P.M.MODIJI என தெரிவித்திருந்தார்.

    English summary
    S.Ve.Shekher tweets that why no black balloon is being sold yesterday? as Modi arrives in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X