சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை போக முடியாத தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள்.. இப்போது எங்கு போகிறார்கள் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் தற்போது சென்னை அடையாற்றில் உள்ள சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கும், கேரள மாநிலம் அரியங்காவுக்கும்(ஐயப்பன் பிறந்த இடம்) செல்வதாக கூறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்ட பக்தர்கள் அனைவரும் இருமுடி கட்டி எரிமேலியில் பேட்டை துள்ளி, பம்மை ஆற்றில் குளித்து அங்கிருந்து கரிமலை, நீலிமலை, சரங்கொத்தி என சுமார் 6 கிலோமீட்டர் தூரம் செங்குத்தான பாதையில் நடந்து சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள். மலை ஏற முடியாத பக்தர்கள் டோலியில் சென்று தரிசிப்பார்கள். அப்போது ஐயப்பனை தரிசிக்கும் போது இருமுடியில் உள்ள நெய் தேங்காய்யை ஐயப்பனுக்கு படைத்து, நெய் அபிஷேகம் செய்து வீடு திரும்புவார்கள்.

sabarimala Devotees from Tamil Nadu, going to chennai and ariyankavu

இந்த முறை கொரோனா காரணமாக சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் அல்லது 2 ஆயிரம் பேர் மட்டுமே தரிசிக்க முடியும் என்கிற நிலை உள்ளது. இன்று தான் கேரள உயர்நீதிமன்றம் தினமும் 5 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளது. விரைவில் இதற்கான முன்பதிவு தொடங்கும் என தெரிகிறது. இந்த சூழலில்

சபரிமலை ஐயப்பனை இனி 5ஆயிரம் பேர் தரிசிக்கலாம் - உயர்நீதிமன்ற உத்தரவால் பக்தர்கள் மகிழ்ச்சிசபரிமலை ஐயப்பனை இனி 5ஆயிரம் பேர் தரிசிக்கலாம் - உயர்நீதிமன்ற உத்தரவால் பக்தர்கள் மகிழ்ச்சி

இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் தற்போது சென்னை அடையாறு அருகே எம்ஆர்சி நகரில் உள்ள சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கும், கேரள மாநிலம் அரியங்காவுக்கும் செல்வதாக கூறப்படுகிறது. இதேபோல் திருச்சி உள்ளிட்ட சில நகரங்களிலும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு திரும்புகிறார்கள்.

English summary
Devotees from Tamil Nadu who are unable to visit the Sabarimala Iyappan Temple are now said to be visiting the Sabarimala Iyappan Temple in Chennai Adyar and the state of Kerala Ariyankavu (Iyappan's birthplace).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X