என்னப்பா இது.. மரத்தின் உச்சியில் உட்கார்ந்துகிட்டு வேர்களை நீக்கலாமா?.. பழனி தொண்டரிடம் சசிகலா வேதனை
சென்னை: மரத்தின் உச்சியின் மேல் உட்கார்ந்து கொண்டு வேர்களாக இருக்கும் தொண்டர்களை கட்சியில் இருந்து நீக்குவது மிகவும் தவறு என பழனியை சேர்ந்த தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
சசிகலா கடந்த சில மாதங்களாக தொண்டர்களுடன் பேசி வருகிறார். இவர்களது உரையாடல் வீடியோ வெளியாகி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆடியோவில் சசிகலா கட்சியை கைப்பற்றுவது குறித்தும், விரைவில் கட்சியை சரி செய்வது குறித்தும் பேசி வருகிறார்.

நிர்வாகிகள்
இந்த நிலையில் நேற்று முன் தினம் வெளியான ஆடியோவில் கொங்கு மண்டல மக்கள் கட்சிக்குத்தான் ஓட்டு போட்டார்கள், எந்த வேட்பாளரை பார்த்தும் ஓட்டு போடவில்லை என்பதை தெரிவித்திருந்தார். அதாவது கொங்கு மண்டல நிர்வாகிகளின் கை அதிமுகவில் ஓங்கி வருவதை அடுத்து சசிகலா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

பழனி
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பெரியராஜிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு மரத்திற்கு வெளியே எப்படி காய், கனி, இலைகள் மட்டும் தெரிவது போல் கட்சி வளர வேர்களாக இருப்பவர்கள் தொண்டர்கள்.

மரத்தின் உச்சி
அப்படிப்பட்ட தொண்டர்களை மரத்தின் உச்சியின் மேல் உட்கார்ந்து கொண்டு நீக்குவது என்பது மிகவும் தவறு. எத்தனையோ தொண்டர்கள் தியாகம் செய்துதான் இந்த கட்சி மாபெரும் சக்தியாக இருக்கிறது. இதில் வந்து தொண்டர்களை அவ்வப்போது நீக்கினால் அது எவ்வளவு பெரிய தவறு என்று ஒரு கட்டத்தில் அவர்களுக்கு புரியும்.

ஜெயலலிதா
இந்த மாதிரி செய்யக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். நிச்சயமாக நான் வருவேன், ஜெயலலிதா எப்படி கட்சியை வழிநடத்தினார்களோ அதே போல் நானும் வழிநடத்துவேன். அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு ஜெயலலிதா என்ன செய்தார்களோ அதை செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை என சசிகலா பேசியுள்ளார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications