ஏக்கங்கள் நிறைவேறும்.. எத்தனை சோதனைகள் வந்தாலும் சரி.. எல்லாவற்றையும் முறியடிப்பேன்.. சசிகலா
சென்னை: அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும் விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும் இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும் வழிபாடு செயய இரு தினங்களுக்கு முன் தென் மாவட்டங்களுக்கு பயணம் சென்று வந்தது மிகவும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்த இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மேற்கொண்டது ஆன்மீக பயணமாக இருந்தாலும் தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எனக்கு மிகப் பெரிய வரவேற்பை அளித்து எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்து என்னை திக்குமுக்காட செய்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நனஅறியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தென் மாவட்டங்கள்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென் மாவட்டங்களில் சென்ற அனைத்து இடங்களிலும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் வழி நெடுகிலும் நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பினாலும் கள்ளம் கபடமற்ற உங்களுடைய உண்மையான அன்பாலும் மனம் நெகிழ்ந்து போனேன்.

விமான பயணம்
அனைவரும் என்னை காண்பதற்காக வெகுநேரம் காத்திருந்த நிலையில் உங்களையெல்லாம் சந்தித்து வந்த பின்னர் விமான பயணத்தையும் மேற்கொள்ள இயலாமல், சாலை மார்க்கமாகவே பயணித்து சென்னை இல்லத்திற்கு வந்தடைந்தேன். நம் புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் ஒவ்வொரு கழக தொண்டர்களின் கண்களில் என்னால் காண முடிந்தது.
Recommended Video

எதிர்பார்ப்புகள் ஏக்கங்கள்
உங்களுடைய எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. அனைத்து பகுதிகளில் உள்ள ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைவரும் ஒரு சேர "நம் இயக்கத்தை காப்பாற்றிட வேண்டும்" என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில் உங்கள் அனைவருக்காகவும், தமிழக மக்களுக்காகவும் என் எஞ்சியுள்ள வாழ்நாட்களை அர்ப்பணித்து நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எத்தகைய சோதனைகள்
எத்தகைய சோதனைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் முறியடித்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உறுதியோடு இருந்து நம் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் வழியில் கழகத்தை காப்போம், கவலைப்பட வேண்டாம். நம் இயக்கத்தை ஆரம்பித்த புரட்சித் தலைவர், சிறப்பாக வழிநடத்திய புரட்சித் தலைவி அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்களின் வழியில் அதே மக்களாட்சியை மீண்டும் அமைத்து "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவின் தாரக மந்திரத்தை மனதில் வைத்து தமிழ் மக்களின் நலன் காப்பாற்றப்படும் என மனம் நிறைந்து சொல்கிறேன், இது உறுதி என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் விகே சசிகலா அதிமுக கழக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications