கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியாச்சே.. இப்படி சண்டை போட்டுக்கிறாங்களே.. சசி பேசியதாக இன்னொரு ஆடியோ!
சென்னை: கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது என சசிகலா பேசியதாக இன்னொரு ஆடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
சரி அமமுகவை வலுப்படுத்தி தேர்தலை சந்தித்து அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என கருதப்பட்டது ஆனால் அவரோ ஒரு நாள் இரவு திடீரென அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அரசியல்
அந்த அறிக்கையில் நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என தெரிவித்திருந்தார். இதனால் சசிகலா நிரந்தரமாக விலகுகிறேன் என சொல்லாமல் ஒதுங்குகிறேன் என சொல்லியுள்ளதால் காலம் கனியும் போது எப்போது வேண்டுமானாலும் அவரது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்றே சொல்லப்பட்டது.

அதிமுக தோல்வி
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் விட்டுக் கொடுக்க முடியாது என சண்டையிட்டு கொண்டனர். இருவரும் தனித்தனி லெட்டர் பேடில் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

ஆடியோ
இந்த நிலையில் நேற்றைய தினம் சசிகலா பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதில் தொண்டர் ஒருவரிடம் சசிகலா நலம் விசாரிப்பது போல் உள்ளது. அப்போது அவர் நான் நிச்சயம் வருவேன். தைரியமாக இருங்கள். கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என சசிகலா கூறியது போல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆடியோ வெளியீடு
இந்த நிலையில் இன்றைய தினம் இன்னொரு ஆடியோ வெளியாகியுள்ளது. இதுவும் சசிகலா தொண்டரிடம் பேசுவது போல் உள்ளது. இந்த ஆடியோவில் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

கவலை வேண்டாம்
சீக்கிரம் வருவேன்- கவலைப்பட வேண்டாம். கொரோனா குறைந்த பின்னர் எல்லோரையும் பார்ப்பேன். கட்சிக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வது பார்ப்பதற்கே வேதனையாக இருக்கிறது. சீக்கிரமே நல்ல முடிவுடன் வருவேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு










Click it and Unblock the Notifications